Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வடக்கு கிழக்கு அபிவிருத்திக்கு விசேடமாக 5000 மில்லியன்

March 6, 2019
in News, Politics, World
0

2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் அதிக வரிச்சுமை காணப்படுவதாக எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் 2019ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டம் நிதியமைச்சர் மங்கள சமரவீரவினால் நேற்று சமர்ப்பிக்கப்பட்டது.

இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு குறிப்பிட்டார்.இந்த வரவு செலவு திட்டம் நாட்டினை மேலும் கடன் சுமைக்குள் தள்ளும் வேலைத்திட்டமாக அமைந்துள்ளது வரவு செலவு திட்டத்தின் மூலமாக நாட்டினை மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவோ முடியாது என்றும் சுட்டிக்காட்டினார்.

பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் வரவு செலவு திட்டத்தில் மக்களுக்கு நன்மைகள் உள்ளதா என்பதை கூறுவதை விடவும் தீமைகள் இல்லை என கூறலாம்:கடனிலிருந்து நாட்டினை மீட்டெடுப்பது நாட்டின் வருவாய் மற்றும் வேலைவாய்ப்புகளை அதிகரிப்பது போன்றன இந்த வரவு செலவு திட்டத்தில் அடங்கவில்லை

பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன்:வடக்கு கிழக்கு அபிவிருத்திக்கு விசேடமாக 5000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.இதனை சரியான முறையில் எடுத்து செயற்படுத்தினால், வாழ்வதாரத்தை உயர்த்துவது மட்டுமன்றி, இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புக்களையும் அதிகரிக்க முடியும்.முன்வைத்த இந்த திட்டங்கள் வரவேற்கத்தக்கது.

மக்கள் விடுதலை முன்னணியின் ஊடகப்பேச்சாளர் விஜித ஹேரத்:வரவு செலவு திட்டம் மக்களுக்கு சகல விதத்திலும் நன்மையான ஒன்றாக அமையும் என ஆரம்பத்தில் அரசாங்கம் கூறியமு. ஆனால் முன்வைக்கப்பட்டுள்ள வரவு செலவு திட்டம் ஒரு கனவு மாளிகை என்றே கூற வேண்டும்.அனைத்து யோசனைகளும் சாதாரண மக்களுக்கு நன்மையான ஒன்றாக கருத முடியாது. இதில் வியாபாரிகளுக்கும் தனியார் துறைசார் நலன்கருதிய ஒன்றாகவே முன்வைக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் சி.ஸ்ரீதரன்:வடக்கு கிழக்கிற்கு பாரிய அளவிலான பிரச்சினைகள் காணப்படுகின்றன. ஆனால் இவற்றை தீர்க்கக்கூடிய அளவிலான திட்டங்கள் இந்த வரலு செலவுத்திட்டத்தில் உள்ளடக்கப்படவில்லை.

Previous Post

இந்தஅரசாங்கத்திடம் பணம் இல்லை!!

Next Post

சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக புதிய தேசிய நிகழ்ச்சித்திட்டம்

Next Post

சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக புதிய தேசிய நிகழ்ச்சித்திட்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures