Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நெடுங்கேணியை ஆக்கிரமிக்கும் இரகசிய நகர்வு

February 1, 2019
in News, Politics, World
0

நெடுங்கேணிப் பிரதேசத்தில் அமைந்துள்ள கச்சர்சமனங் குளம் சுமார் 200 ஏக்கர் நிலப்பரப்பில் பயிர்ச் செய்கைக்கு தேவையானளவு நீரை சேமிக்கும் வகையில் இரகசியமாக புனரமைக்கப்பட்டுள்ளதாகவும் அதனை அண்டிய பிரதேசங்களில் குடியேற்றங்களை ஏற்படுத்தும் வகையில் காடுகள் சுத்திகரிக்கப்பட்டுள்ளதாகவும் முன்னாள் வடக்கு மாகாண சபை அமைச்சர் பா. சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

நெடுங்கேணிப் பிரதேசத்தில் சிங்கள குடியேற்றத்துக்கான நகர்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றதாக செய்திகள் வெளியாகியுள்ளமை தொடர்பாக  ஊடகங்களுக்குக்  கருத்து தெரிவிக்கும்போதே முன்னாள் வடக்கு மாகாண அமைச்சர், குறித்த கருத்தை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் மேலுவும் தெரிவிக்கையில் –

குறித்த பிரதேசத்திற்கு நேரில் சென்று அவதானித்த தகவல்களின் அடிப்படையில் பூரண அறிக்கை ஒன்றை தயாரித்து வருவதாகவும் அதனை கூட்டமைப்பின் தலைமையின் கவனத்திற்கு கொண்டுவந்து மேலதிக நடடிக்கைக்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

வவுனியா மாவட்டத்தில், நெடுங்கேணிப் பிரதேசத்தில் மக்கள் நடமாட்டம் இல்லாமல் காணப்படுகின்ற காட்டுப் பிரதேசத்தில் அமைந்துள்ள கச்சர்சமனங்குளம் புனரமைக்கப்பட்டுள்ளதோடு அதனை அண்டிய ஊற்றுக்குளம் போன்ற பிரதேசங்கள் இரகியமான முறையில் சுத்திகரிக்கப்பட்டு விகாரை அமைக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கச்சர்சமனங் குளத்தில் சேகரிக்கப்படுகின்ற நீரை பயன்படுத்தி சுமார் 25 ஏக்கர் வரையில் பயிர் செய்கையும் ஆரம்பிக்கப்பட்டுளளதாக குறித்த பிரதேசத்திற்கு நேரில் சென்ற வவுனியா மாவட்ட கமநலத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சுமார் 200 ஏக்கர் நிலப்பரப்பில் பயிர் செய்கை மேற்கொள்ளும் வகையில், இரண்டு வருடங்களுக்கு அதிகமாக புனர்நிர்மாணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, தற்போது பூரணப்படுத்தப்பட்டுள்ள கச்சர்சமனங்குளம் வவுனியா மாவட்ட கமநல திணைக்களத்தில் அதிகார எல்லைக்குள் காணப்படுகின்றது.

அதேபோன்று குறித்த பிரதேசத்தை அண்டிய காணிகளை பகிர்ந்தளிக்கும் அதிகாரம் வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்டு காணப்படுகின்றது. இவ்வாறான நிலையில், நிர்வாக ஒழுங்குகளை கண்டுகொள்ளாமல் அனுராதபுரம் கமநல திணைக்களத்தினால் குறித்த குளம் புனரமைக்கப்பட்டுள்ளதோடு வவுனியா பிரதேச செயலாளரின் அனுமதியின்றி காணிகள் பகிரப்பட்டு  பயிர்ச் செய்கையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த பிரதேசங்களில் தமிழ் மக்கள் பூர்வீகமாக வாழ்ந்து வந்த நிலையில், 83 கலவரத்தினை தொடர்ந்து மணலாறு வவுனியா எல்லை பிரதேசங்களில் நிலவிய பதற்ற நிலை காரணமாக இடம்பெயர்ந்து வாழ்ந்தமையின் காரணமாகவே அவை பற்றை காடுகளாக மாற்றடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

ஐரோப்பா மோகம்! பல இளைஞர்களை ஏமாற்றி திருமணம் செய்த இலங்கை பெண்

Next Post

ஐரோப்பிய நாடுகளில் வேலை வாய்ப்பு!

Next Post

ஐரோப்பிய நாடுகளில் வேலை வாய்ப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

நடிகர் வெற்றி நடிக்கும் ‘லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கு’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு!

நடிகர் வெற்றி நடிக்கும் ‘லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கு’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு!

June 25, 2026
மேற்கிந்தியத் தீவுகளை வெற்றிகொண்டு முதலாவது அணியாக அரை இறுதிக்கு தகுதி பெற்றது இங்கிலாந்து

மேற்கிந்தியத் தீவுகளை வெற்றிகொண்டு முதலாவது அணியாக அரை இறுதிக்கு தகுதி பெற்றது இங்கிலாந்து

June 25, 2026
விலைவாசி அதிகரிப்பைக் கண்டித்து மக்கள் போராட்ட இயக்கம் எதிர்ப்புப் பேரணி

விலைவாசி அதிகரிப்பைக் கண்டித்து மக்கள் போராட்ட இயக்கம் எதிர்ப்புப் பேரணி

June 25, 2026
அரசு பிடிவாதத்தைக் கைவிட்டு மக்களின் வாழ்வியல் உரிமையை உத்தரவாதப்படுத்த வேண்டும் – சுரேஷ்

வவு­னியா மேயர், சாவகச்சேரி உதவித் தவிசாளர் ஆகியோரை பதவி நீக்கியமைக்கு சுரேஷ் பிரேமச்சந்திரன் கண்டனம்

June 25, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures