Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

உரிய காலத்தில் வான் கதவுகளை திறந்திருந்தால் அழிவுகளை குறைத்திருக்கலாம்

December 28, 2018
in News, Politics, World
0

உரிய காலப்பகுதியில் இரணைமடுக் குளத்தின் வான்கதவுகளை திறந்திருந்தால் அழிவுகள், சேதங்களைத் தடுத்திருக்க முடியுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் நேற்று (27) நடைபெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்: வடக்கில் கடந்த வெள்ளி மற்றும் சனி ஆகிய தினங்களில் பெய்த கனமழையால் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் வாழும் மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டனர்.இயற்கையைக் கட்டுப்படுத்த முடியாது போனாலும்,வான் கதவு களை உரிய நேரத்தில் திறந்திருந்தால்,அழிவுக ளை நிச்சயம் தவிர்த்திருக்க முடியும்.இவ்வா றான அழிவுகள்,சேதங்கள் ஏற்பட்டமைக்கு அரசியல் தலைமையின் நெறிப்படுத்தலின்மை யே முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

அந்தவகையில் தற்போது மக்களுக்கு ஏற்பட்ட அழிவுகள் மற்றும் பாதிப்புகள் தொடர்பில் உரிய விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என நாம் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்.

இரணைமடுக் குளத்தினூடாக யாழ் குடாநாட்டு மக்களுக்கு குடிநீர் வழங்க முடியாது என சக தமிழ் கட்சிகள் கூறிவந்த போதிலும் இன்று இர ணைமடு குள நீர் கடலுக்குள் செல்வது தவிர்க்க முடியாததாகிவிட்டது. இந்நிலையைக் கருத்திற் கொண்டே கிளிநொச்சி மக்கள், விவசாயிகளுக் குத் தேவையான நீரைத் தவிர்ந்த எஞ்சிய நீரை குடாநாட்டு மக்களுக்கு வழங்குமாறு முன்னை ய காலங்களில் நாம் கோரிக்கை விடுத்திருந் தோம்.இந்நிலையில்,கீழ்வாய்க்கால் அணைக் கட்டுமானம் மற்றும் குளத்தின் அணைக்கட்டு போன்ற பாதுகாப்பு விடயங்களில் ஊழல்கள் இடம் பெற்றுள்ளதாக அறியக் கிடைக்கின்றது.

இதனை நோக்குமிடத்து 7 ஆயிரம் மில்லியன் ரூபாய் நிதி செலவிடப்பட்ட நிலையில் அந்த நிதியூடாக மேற்கொள்ளப்பட்ட வேலைகள் கேள்விக்குறியாகியுள்ளதாகவும் டக்ளஸ் எம்பி சுட்டிக்காட்டினார்.

அதுமாத்திரமன்றி வான்கதவுகள் பாலங்கள் பொருத்தமற்றவையாக உள்ளதாகவும் சுட்டிக் காட்டப்படுகின்றது. எனவே, எதிர்காலங்களில் இவ்வாறான ஊழல்கள் இடம்பெறாத வண்ணம் இவ்விடயங்களை அவதானிப்பது சகல ஊடகங் களின் பொறுப்பாகும் என்றும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

Previous Post

படையினர் பயன்படுத்திய காணிகள் உத்தியோகபூர்வமாக விடுவிப்பு

Next Post

போதைப் பொருள் கடத்தல்; தேடுதல்களை பலப்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்பு

Next Post

போதைப் பொருள் கடத்தல்; தேடுதல்களை பலப்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures