யாழ்ப்பாணத்தில் பெரிய வெங்காயச் செய்கை மேற்கொள்வது கிடையாது. ஆனால் அதற்கு இலவச காப்புறுதி உண்டு ஆனால் அதிக விவசாயிகளினால் மேற்கொள்ளும் சிறிய வெங்காயச் செய்கைக்கு இலவச காப்புறுதி கிடைப்பதில்லை . என யாழ்ப்பாண மாவட்ட விவசாய சம்மேளணத் தலைவர் கந்தையா – தியாகலிங்கம் தெரிவித்தார்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் தெல்லிப்பளை பிரதேச செயலாளர் பிரிவில் மட்டும் இந்த ஆண்டிலேயே முதன் முதலாக 40 ஏக்கரில் மேற்கொள்ளும் பெரிய வெங்காயத்திற்கு இலவச காப்புறுதி வழங்கும் விவசாய அமைச்சு யாழில் இத்தனை ஆண்டுகளாக மேற்கொள்ளும் சிறிய வெங்காயத்திற்கு மட்டும் புறக்கணிக்கின்றனர். ஏனெனில் இலங்கையின் தென்பகுதியில் அதிகம் பெரிய வெங்காயச் செய்கை மேற்கொள்கின்றனர். ஆனால் சிறிய வெங்காயம் அதிகமாக வடக்கிலேயேயே மேற்கொள்ளப்படுகின்றது.
பெரிய வெங்காயச் செய்கை அழிவடைந்தால் இலவச காப்புறுதியாக ஏக்கருக்கு 40 ஆயிரம் ரூபா வழங்கப்படுகின்றது. ஆனால் சிறிய வெங்காயச் செய்கை மேற்கொள்ளும்
யாழ்ப்பாணக் குடாநாட்டில் மட்டும் ஆண்டிற்கு 1200 முதல் 1450 ஏக்கர் செய்கை மேற்கொள்ளும் நிலையில் அழிவடைந்தால் எந்தக் காப்புறுதியும் கிடையாது. இதனை கடந்த காலங்களில் வந்த அமைச்சர்களிடமும் கோரினோம். இருப்பினும் இன்றுவரை வழி கிட்டவில்லை. என்றார்.
சிறிய வெங்காயத்திற்கு காப்புறுதி இல்லை . எனத் தெரிவிப்பது தவறு ஆனால் சிறிய வெங்காயத்தினை பாத்தியில் நாட்டினால் காப்புறுதி கிடையாது. வரம்பு கட்டி நட்டால் மட்டுமே பெற்றுக்கொள்ள முடியும். ஆனால் அதற்கு ஆயிரம் கண்டுகளிற்கு ஆயிரத்து 200 ரூபா செலுத்த வேண்டும் கமநல காப்புறுதி உதவி ஆணையாளர் பதிலளித்தார்.
யாழ்ப்பாண மாவட்ட புவியியல் தன்மையில் எல்லாப் பிரதேசத்திலும் அவ்வாறு வரம்பு கட்டி செய்கை பன்ன முடியாது. மழை நீர் தேங்கும் பிரதேசத்தில் மட்டுமே அவ்வாறு நாட்ட முடியும். என ஏற்கனவே விவசாயிகளினால் கூறப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தைப் பொறுத்த மட்டில் அதிக பிரதேசத்தில் பாத்தியில் நாட்டுவதே உசிதாக கானப்படுவதனால் அதற்கு காப்புறுதிக்கு சந்தர்ப்பம் உண்டா என ஆராய்ந்து பெரிய வெங்காயத்திற்கு கிடைக்கும் அதேகாப்புறுதியை பெற்றுக்கொடுக்க கமநல காப்புறுதி ஆணையாளர் விண்ணப்பிக்க வேண்டும்.
ஏனெனில் ஆயிரம் கண்டுகளிற்கு ஆயிரத்து 200 ரூபா என்பது ஏக்கருக்கு 40 ஆயிரம் ரூபாவினைத் தொட்டுவிடும். இது அதிக பணச் செலவினை ஏற்படுத்தும் என மாவட்டச் செயலாளர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

