Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

உலகம் முழுவதும் தண்ணீரில் ஓடப்போகும் உந்துருளிகள்

December 24, 2018
in News, Politics, World
0

தமிழ் நாடு மதுரையைச் சேர்ந்த இளம் விஞ்ஞானி ஒருவர் தண்ணீரில் இயங்கக்கூடிய உந்துருளி ஒன்றைக் கண்டுபிடித்துள்ளார்.

நேற்றைய தினம் சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் அந்த உந்துருளியை இயக்கிக் காட்டினார்.

சென்னை வடபழனியில் தமிழ்நாடு அனைத்து மின்பணியாளர் முன்னேற்ற நலச் சங்கத்தின் 7-ம் ஆண்டு விழா சங்கத்தின் நிறுவனர் எம்.நாகலிங்கம் தலைமையில் நேற்று நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக இளம் விஞ்ஞானி முருகன் பங்கேற்று, மின் பொருட்கள் கண்காட்சியை தொடங்கி வைத்து விழா மலரை வெளியிட்டார்.

இதன்போது தண்ணீரில் இயங்கக்கூடிய இருசக்கர வாகனத்தை அறிமுகப்படுத்தி முருகன் செயல்விளக்கம் அளித்தார். தொடர்ந்து, வாகனத்தை இயக்கிக்காட்டி அனைவரின் பாராட்டையும் பெற்றார்.

மதுரை மாவட்டம் மேலூரை அடுத்த ரெங்கசாமிபுரத்தை சேர்ந்த இளம் விஞ்ஞானி முருகன், மதுரை அரசு ஐடிஐ-யில் 2-ம் ஆண்டு படிக்கிறார். சிறுவயதில் இருந்தே அறிவியல் கண்டுபிடிப்புகளில் ஆர்வம் மிகுந்தவர். தனது கண்டுபிடிப்புகளுக்காக பல பரிசுகள், பாராட்டுகளைப் பெற்றுள்ளார்.

தண்ணீரில் ஓடும் உந்துருளி குறித்து முருகன் கூறியதாவது,

”இருசக்கர வாகனத்தை ஸ்டார்ட் செய்வதற்கு மட்டும் பெட்ரோல் தேவை. எனவே, வண்டியை ஸ்டார்ட் செய்யும்போது மட்டும் பெட்ரோலை ஊற்றவேண்டும். பைக்கின் ஒருபுறம் 1 லிட்டர் நீருடன் 200 கிராம் உப்பை போட்டு கலந்து வைக்க வேண்டும். அதற்குள் சோலார் பேனலுடன் கூடிய பேட்டரி இணைக்கப்படும். இதன்மூலம் உப்பு கலந்த நீரில் இருந்து ஆக்ஸிஜன் தனியாக பிரிந்து வெளியேறிச் செல்ல, ஹைட்ரஜன் இன்ஜினுக்கு சென்று வாகனத்தை இயக்குகிறது. இந்த பைக்கில் 40 கி.மீ. தூரம் வரை செல்லலாம்.

2016-17ல் வேர்க்கடலையை உரிக்கும் இயந்திரத்தைக் கண்டுபிடித்து, ‘ஸ்பேஸ் கிட்ஸ்’ சார்பில் வழங்கப்படும் இளம் விஞ்ஞானி விருதை சென்னையில் பெற்றேன். அதைத் தொடர்ந்து, ‘வீடர் கார்’ ஒன்றை உருவாக்கினேன். சாதாரண பயன்பாடு, மாற்றுத் திறனாளிகள், விவசாயம் என முப்பரிமாணப் பயன்பாட்டுக்காக உருவாக்கினேன். ஆனால், போதிய பணம் இல்லாததால் அதை முழுமைப்படுத்த முடியவில்லை.

என்னிடம் இதுபோல பல செயல் முறைத் திட்டங்கள் உள்ளன. அரசு உதவி செய்தால், என்னால் மேலும் பல அறிவியல் கண்டுபிடிப்புகளைக் கொண்டுவர முடியும். பல்வேறு பள்ளிகளுக்குச் சென்று என் அறிவியல் கண்டுபிடிப்புகள் பற்றி மாணவர்களுக்கு விளக்கி வருகிறேன்.” என்றார்.

இதேவேளை, பல திறமைகள் இருந்தும், பொருளாதார வசதி இல்லாததால் தன் கண்டுபிடிப்புகளுக்கு அங்கீகாரம் கிடைக்காமல் இளம் விஞ்ஞானி முருகன் தவிப்பதாகவும் அவருக்கு தமிழ்நாடு அனைத்து மின்பணியாளர் முன்னேற்ற நலச் சங்கம் அனைத்து உதவிகளையும் செய்யும் என்றும் சங்கத்தின் நிறுவனர் எம்.நாகலிங்கம் தெரி வித்தார்.

Previous Post

சார்லி எப்தோ பயங்கரவாதி கைது!

Next Post

மீண்டும் வெடிக்கும் ‘கிரகட்டாவ்’ எரிமலை

Next Post

மீண்டும் வெடிக்கும் 'கிரகட்டாவ்' எரிமலை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures