Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

96′ தெலுங்கு ரீமேக் : த்ரிஷா, சமந்தா இடையே போட்டி

December 24, 2018
in Cinema
0

தமிழ் சினிமாவில் இந்த 2018ம் ஆண்டில், விஜய் சேதுபதி, த்ரிஷா நடித்த ’96’ பலரையும் கவர்ந்த ஒரு படமாக இருந்தது. மிகப் பெரிய வரவேற்பையும், வசூலையும் இந்தப் படம் குவித்தது. படம் வெளியாவதற்கு முன்பே இந்தப் படம் பெரும் வெற்றியைப் பெறும் என்று கணித்து பிரபல தெலுங்குப் படத் தயாரிப்பாளரான தில் ராஜு, தெலுங்கு ரீமேக் உரிமையை நல்ல விலை கொடுத்து வாங்கினார்.

தெலுங்கில் விரைவில் ரீமேக் ஆக உள்ள இந்தப் படத்தில் தமிழில் விஜய் சேதுபதி நடித்த கதாபாத்திரத்தில் சர்வானந்த் நடிக்க உள்ளார். த்ரிஷா நடித்த கதாபாத்திரத்தில் யார் நடிக்கப் போகிறார்கள் என்பதில் த்ரிஷாவுக்கும், சமந்தாவுக்கும் இடையே பலத்த போட்டி நிலவி வருகிறது.

தமிழில் படத்தை இயக்கிய பிரேம்குமார் தான் தெலுங்கிலும் படத்தை இயக்கப் போகிறார். அவர் தெலுங்கிலும் த்ரிஷாவை நடிக்க வைக்கும் முடிவில் தான் இருக்கிறார். ஆனால், தயாரிப்பாளர் ராஜு, சமந்தாவை நடிக்க வைக்கும் முடிவில் இருக்கிறார். த்ரிஷா, ஒரு காலத்தில் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்தார். ஆனால், இப்போது சமந்தா தான் தெலுங்கில் முன்னணி நாயகி. எனவே, சமந்தா நடித்தால் வியாபார ரீதியாக பிரச்சினை இல்லை என தயாரிப்பாளர் நினைக்கிறாராம்.

இந்த விவகாரத்தில் தயாரிப்பாளர் வெற்றி பெறப் போகிறரா அல்லது இயக்குனர் வெற்றி பெறப் போகிறாரா என்பது விரைவில் தெரியும்.

Previous Post

அஜித் பட நாயகிகள் நஸ்ரியா, ஷ்ரத்தா, கல்யாணி.?

Next Post

ஜெ.,வாக முயற்சிக்கும் நித்யா

Next Post

ஜெ.,வாக முயற்சிக்கும் நித்யா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures