Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

மீண்டும் சினிமாவில் நடிப்பது ஏன்? – அரவிந்த்சாமி

December 24, 2018
in Cinema
0

நடிகர் அரவிந்த்சாமி, சினிமாவில் முக்கியத்துவத்தோடு இருந்தவர், திடீரென சினிமாவை விட்டு விலகிச் சென்றார். தனி ஒருவன் படத்தில் வில்லனாக நடித்து மீண்டும் பிரபலமானார். தொடர்ந்து படங்களில் நடித்து வரும் அவர், தன்னுடைய வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் குறித்து பேசியிருக்கிறார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது : நடிப்பது தான் என்னுடைய ஆசையாக இருந்தது. அதனால் தன் சினிமாவுக்கே வந்தேன். ஆனால், பெரிய ஸ்டார் ஆவேன் என்று ஒரு நாளும் நினைத்ததில்லை. அப்படியொரு நிலையை அடைய வேண்டும் என்ற விருப்பமும் இருந்ததில்லை. ஸ்டார் ஆனதால், என்னுடைய பிரைவசி பறிபோனது. அதனால்தான், போதும் என்று சினிமாவை விட்டு விலகினேன்.

அமெரிக்காவுக்கு சென்றேன். மாஸ்டர் படித்தேன். பின், தொழில் தொடங்கினேன். அந்த தொழில் பல நாடுகளிலும் வெற்றிகரமாகவே நடந்தது. ஆனாலும், ஒரு கட்டத்தில், அதையும் 2005ல் விட்டு விட்டேன். என் குழந்தைகள் தனியாக வளர வேண்டிய சூழல் இருந்ததால், அதை உடைத்து, அவர்களோடு இணைந்து வாழ்க்கையைத் தொடர்ந்தேன்.

சினிமாவுக்கு திரும்பவும் வர வேண்டும் என்ற எண்ணம், அப்போதும் கூட எனக்கு இல்லை. திடுமென கடல் படத்தில் நடிக்க வேண்டும் என்று மணிரத்னம் என்னை கூப்பிட்டார். மறுக்க முடியவில்லை. நடித்தேன். இருந்தாலும், படம் சரியாக போகவில்லை. தோல்வியை ஏற்க முடியவில்லை. கூடவே, இப்படியொரு தோல்வியோடு என்னுடைய வாழ்க்கை முடிந்துவிடக் கூடாது என்றும் நினைத்தேன். அதனால்தான், தொடர்ந்து நடிக்க முடிவெடுத்து, படங்களை வரிசையாக ஒப்புக் கொண்டு, நடிக்கத் துவங்கினேன்.

இவ்வாறு அரவிந்த்சாமி கூறியுள்ளார்.

Previous Post

தள்ளிப் போகும் ‘சர்வம் தாள மயம்’

Next Post

கமல் ஜீரோ அல்ல; ஹீரோ: விஜய் மில்டன்

Next Post

கமல் ஜீரோ அல்ல; ஹீரோ: விஜய் மில்டன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures