Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மாஞ்சோலை மருத்துவமனைக்கு செல்லும் அவசர நோயாளர்களை திருப்பியனுப்பும் மருத்துவர்கள்- மக்கள் அவலம்

December 23, 2018
in News, Politics, World
0

முல்லைத்தீவு மாஞ்சோலையில் உள்ள மாவட்ட வைத்தியசாலைக்குச் செல்லும் அவசர நோயாளர்களைக்கூட மறுநாள் வருமாறு திருப்பி அனுப்புவமாக தொடர்ந்தும் குற்றஞ்சாட்டப்படுகின்றது.

முல்லைத்தீவில் நாய் ஒன்றினால் முகத்தில் கடியுண்ட 8 வயதுச் சிறுமியை சிகிச்சைக்கு உட்படுத்தாது மறுநாள் வருமாறு கூறி மாவட்ட வைத்தியசாலையில் திருப்பியனுப்பியதால் பெற்றோர் தனியார் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் தனியார் வைத்தியரோ மாவட்ட வைத்தியசாலைக்கே செல்ல வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

இவ்வாறு கடந்த 18ம் திகதி மாலை 5.30 மணியளவில் 8 வயதுச் சிறுமியை ஓர் வளர்ப்பு நாய் கடித்தமையினால் சிறுமியின் தாயார் சிறுமியை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளார். இதன்போது வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவில் வைத்தியர் பணியில் இல்லை. இதனால் அங்கே இருந்த ஊழியர்கள் சிறுமியை மறுநாள் அழைத்து வருமாறுகூறி திருப்பி அனுப்பியுள்ளனர். இதனால் வைத்தியசாலையில் இருந்து தனது மகளுடன் வெளியேறிய தாயார் சிறுமியை ஓர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

இதன்போது நிலமையினை அவதானித்த தனியார் வைத்தியர் முகத்தில் கடி காயம் உள்ளது. வளர்ப்பு நாய்க்கு தடுப்பூசி ஏற்றப்படவில்லை. எனவே சிறுமிக்கு கண்டிப்பாக தடுப்பூசி போடவேண்டும் மாவட்ட வைத்தியசாலைக்கே மீண்டும் சென்று நிலமையை கூறுங்கள் என அறிவுறுத்தியுள்ளார்.

இதனால் சிறுமியின் தாயார் செய்வதறியாது பதறிய நிலையில் மீண்டும் மாவட்ட வைத்தியசாலைக்குச் சென்று நிலமையைகூறி விடுதியில் அனுமதிக்க கோரியுள்ளார். அதன் பெயரில் நீண்ட முயற்சியின் பின்னர் சிறுமி 18ம் திகதி விடுதியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையின் பின்னர் 20ம் திகதி மாலை வீடு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேபோன்று 20 வயது யுவதி ஒருவர் கடந்த 10ம் திகதி காலில் தகரம் வெட்டிய நிலையில் மாவட்ட வைத்தியசாலைக்குச் சென்ற நிலையில் மதியம் 1மணியளவில் வைத்தியர் பணியில் இல்லாத காரணத்தினால் மறுநாள் வருமாறு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார். இதனால் வைத்தியசாலையில் இருந்து வெளியேறிய யுவதி வேறு மார்க்கம் இன்றி தனியார் வைத்தியசாலைக்கு சென்று சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார். இருப்பினும் குறித்த புண் ஏற்புவலியாக்கிய நிலையில் கால் பெரும் வீக்கத்துடன் கொதி வலி காரணமாக யுவதி தற்போது 3 தினங்களாக மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு ஓர் மாவட்ட வைத்தியசாலையிலேயே வைத்தியர்கள் இன்மை காரணமாக ஏற்படும் பெரும் பாதிப்புக்கள் தொடர்பில் எவருமே கண்டுகொள்வமில்லை. என முல்லைத்தீவு மக்கள் சார்பில் எழுப்பும் குற்றச் சாட்டுத் தொடர்பில் மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி பூங்கோதையுடன் தொடர்பு கொண்டு கேட்டபோது ,

குறித்த இரு சம்பவங்களும் இடம்பெற்றதாக இதுவரை முறையிடப்படவில்லை. அவ்வாறு முறைப்பாடுகள் கிடைக்கும் சந்தர்ப்பத்தில் அது தொடர்பில் உரிய முறையிலான விசாரணைகள் இடம்பெறும் . என்றார்.

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் மேற்படி குற்றச் சாட்டானது நீண்டகாலமாக பலராலும் முன்வைக்கப்படுகின்றபோதும் குற்றச் சாட்டுக்கள் தொடர்ந்த வண்ணமே உள்ளதும் குறிப்பிடத்தக்கது.-

இதேநேரம் வடக்கு மாகாண சுகாதாரத் திணைக்களப் பணிப்பாளர் வைத்தியக் கலாநிதி கேதீஸ்வரன் நேற்றைய தினம் முல்லைத்தீவு வைத்தியசாலைக்கு திடீர் பயணம் மேற்கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

Previous Post

30 ஆயிரம் பேரை நிர்க்கதிக்குள்ளாக்கிய வடக்கில் பெய்த மழை

Next Post

கட்சியின் சிபார்சுப் பட்டியலிற்கு மட்டுமே பழமரக் கன்றுகள் வழங்கப்படுவதாக விவசாயிகள் கவலை

Next Post

கட்சியின் சிபார்சுப் பட்டியலிற்கு மட்டுமே பழமரக் கன்றுகள் வழங்கப்படுவதாக விவசாயிகள் கவலை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

ஜப்பானின் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியுடன் டியூனிசியா வெளியேறியது

ஜப்பானின் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியுடன் டியூனிசியா வெளியேறியது

June 21, 2026
செம்மணியில் மீட்கப்பட்ட பிற பொருட்கள் தொடர்பில் CID விசாரணை அறிக்கையும் சமர்ப்பிப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல், செம்மணி விடயத்தில் அரசின் அணுகுமுறைய வரவேற்கின்றோம் – சிறிநேசன்

June 21, 2026
வங்கித் தகவல்களைப் பயன்படுத்தி சமூக ஊடக மோசடிகள் | பொலிஸார் எச்சரிக்கை

சமூக ஊடகங்கள் ஊடாக பெண்கள் ஏமாற்றப்படும் சம்பவங்கள் அதிகரிப்பு: பொலிஸார் எச்சரிக்கை!

June 21, 2026
செம்மணி மனித புதைகுழியில் எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 400ஐ கடந்தது!

செம்மணி மனித புதைகுழியில் எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 400ஐ கடந்தது!

June 21, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures