செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் என்.ஜி.கே. படம் பற்றி ஆரம்பத்தில் பரபரப்பாக செய்திகள் அடிபட்டன. அண்மைக்காலமாக அப்படம் பற்றி பெரிய அளவில் செய்திகள் ஏதும் வரவில்லை.
என்.ஜி.கே. படம் பற்றி சமீபத்தில் ஒரு அறிவிப்பு வெளிவந்துள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில் உருவாகிவரும் என்.ஜி.கே படத்திற்காக இயக்குனர் விக்னேஷ் சிவன் ஒரு பாடல் எழுதியுள்ளார்.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வெளிவந்த ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்திலும் அவர் மூன்று பாடல்களை எழுதியிருந்தார். அந்தப்படத்தில் இடம்பெற்ற ‘சொடக்கு மேல சொடக்கு’ பாடல் ஹிட்டானதால் அப்பாடலை எழுதிய மணி அமுதனுக்கு ‘என்ஜிகே’ படத்தில் 3 பாடல்கள் எழுதும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
‘என்.ஜி.கே.’ படத்தின் ரிலீஸ் குறித்து விரைவில் அறிவிப்பு வரும் என சொல்லப்படுகிறது.












