Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இன்று கும்ப ராசி அன்பர்களுக்கு மனதில் குழப்பம் ஏற்பட்டு மறையுமாம்

October 19, 2018
in News
0

மேஷம்: மனதில் உற்சாகம் நிலைத்திருக்கும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி உருவாகும். உபரி வருமானத்தால் சேமிப்பு உயரும். வழக்கு, விவகாரங்களில் சாதகமான தீர்வு வந்து சேரும். பெண்கள் இஷ்ட தெய்வ வழிபாடு சிறப்பாக நடத்துவர்.

ரிஷபம்: மனதில் சிறுகுழப்பம் ஏற்பட்டு மறையும். நவீன மாற்றத்தால் தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி காண்பீர்கள். பணவரவு சீராகும். வெகுநாள் காணாமல் தேடிய பொருள் விடாமுயற்சி யால் கிடைக்கும். பெண்கள் குடும்பநலனுக்காக பாடுபடுவர்.மிதுனம்: எவருக்கும் தேவையற்ற வாக்குறுதி தர வேண்டாம். தொழில், வியாபாரத்தில் இடையூறுகளை தாமதமின்றி சரி செய்யவும். பணியாளர்கள் பணிச்சுமைக்கு ஆளாகலாம். பணவரவு சீராக இருக்கும். வெளியூர் பயணத்தில் திடீர் மாற்றம் ஏற்படலாம்.

கடகம்: சமயோசிதமான செயலால் நன்மை காண்பீ்ர்கள். தொழிலில் வளர்ச்சி அதிகரிக்கும். நிலுவைப்பணம் வசூலாகும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி கூடும். அரசியல்வாதிகள் பதவி பெற அனுகூலம் உண்டு. பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்குவர்.rology

சிம்மம்: உங்கள் வாழ்வில் கூடுதல் வளம்பெற புதிய வாய்ப்பு உருவாகும். தன்னம்பிக்கையுடன் பணிகளில் ஈடுபடுவீர்கள். தொழில், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பணியாளர்கள் சலுகை கிடைக்கப் பெறுவர். பெண்கள் தேவைகளை தாராள செலவில் நிறைவேற்றுவர்.

கன்னி: உங்களின் நற்செயலை சிலர் பரிகாசம் செய்யலாம். தொழில், வியாபாரம் செழிக்க விடாமுயற்சி தேவைப்படும். பணவரவு மிதமாக இருக்கும். சொத்து, ஆவணம் பிறர் பொறுப்பில் தரக் கூடாது. வாகனத்தில் மிதவேகம் பின்பற்றுவது நல்லது.

துலாம்: பரபரப்புடன் பணியாற்றுவீர்கள். தொழில்,வியாபாரம் சார்ந்த குறைகளை சரிசெய்வ தால், எதிர்பார்த்த வளர்ச்சி உருவாகும்.சிறு அளவில் கடன் வாங்க நேரிடலாம். பணியாளர்கள் பணிச்சுமைக்கு ஆளாவர். பெண்களுக்கு பிள்ளைகளின் நற்செயல் ஆறுதல் அளி்கும்.

விருச்சிகம்: மனதில் தெய்வ நம்பிக்கை மேலோங்கும். தொழிலில் தேவையான மூலதனத் துடன் அபிவிருத்திப்பணி செய்வீர்கள். ஆதாயம் அதிகரிக்கும்.உறவினர்க்கு கொடுத்த வாக் குறுதியை நிறைவேற்றுவீர்கள். பெண்கள் விருந்து விழாவில் கலந்து கொள்வர்.

தனுசு: உறவினரின் பேச்சால் அதிருப்தி கொள்வீர்கள். தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட பணிகளில் தாமதம் ஏற்படலாம். பணவிஷயத்தில் விழிப்புடன் இருக்கவும். பணியாளர்கள் பணியில் மட்டும் கவனம் செலுத்தவும். பெண்கள் பிறர் விஷயத்தில் தலையிட வேண்டாம்.

மகரம்: எதிர்கால வளர்ச்சிநோக்கில் புதிய திட்டம் உருவாக்குவீர்கள். தொழில், வியாபார வளர்ச்சியால் பணவரவு அதிகரிக்கும். பணியாளர்கள் சலுகை பெற்று மகிழ்வர். பெண்கள் வீட்டு உபயோகப்பொருள் வாங்குவர். பிள்ளைகளால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

கும்பம்: தொழில், வியாபாரத்தில் சுமாரான லாபம் இருக்கும். அவசர தேவைகளுக்கு சேமிப்பு பணம் கரையும். பணியாளர்கள் பணியை விரைந்து முடிப்பர். பெண்களுக்கு உடல்நலனில் அக்கறை அவசியம்.

மீனம்: தடைகளை முறியடிக்க புதிய உத்திகளை கையாள்வீர்கள். தொழிலில் உற்பத்தி, விற்பனை சிறக்கும். லாபம் உயரும். பணியாளர்களுக்கு நிர்வாகத்திடம் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். பெண்கள் மனம் போல ஆடை, ஆபரணம் வாங்குவர்.

Previous Post

6வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற இளைஞருக்கு தூக்கு

Next Post

சோமாலியா பயங்கரவாதிகள் முகாம்மீது அமெரிக்கா அதிரடி தாக்குதல்

Next Post

சோமாலியா பயங்கரவாதிகள் முகாம்மீது அமெரிக்கா அதிரடி தாக்குதல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures