தீபாவளி பண்டிகையையொட்டி, ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் சம்பளம் போனஸ் வழங்கப்படுகிறது. இதில் குறைந்த பட்சம் ரூ.17 ஆயிரம் போனஸ் கிடைக்கும்.
அரசு மற்றும் தொழிலாளர் சங்கம் நடத்திய பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து கடந்த ஆண்டுகளைப்போல இந்த ஆண்டும் ரயில்வேயின் உற்பத்தி சார்ந்த தொழிலாளர்களுக்கு 78 நாட்கள் ஊதியத்தை போனஸாக வழங்க ரயில்வே துறை ஒப்புக்கொண்டுள்ளது.
கடந்த 6 வருடங்களாக வழங்கப்பட்டு வருவதைப்போல, 2017-18ம் ஆண்டுக்கான போனஸாக 78 நாள் ஊதியத்தை வழங்குமாறு ரயில்வே வாரியம் கேட்டுக் கொண்டது. அதைத்தொடர்ந்து ரயில்வே துறையின் மூத்த அதிகாரிகள் மற்றும் ரயில்வே யூனியன் நடத்திய பேச்சு வாரத்தையில் உடன்பாடு ஏற்பட்டு, அதற்கு ரயில்வே துறை ஒப்புதல் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக ரயில்வே ஊழியர்களுக்கு 78 சம்பளம் போனஸ் பெறுவது உறுதியாகி உள்ளது. ரயில்வேயில் உற்பத்தி சார்ந்த பணியில் வேலை செய்து வரும் சுமார் 12.26 லட்சம் ரயில்வே ஊழியர்களுக்கு இந்த போனஸ் கிடைக்கும்.
வட மாநிலங்களில் தீபாவளி போனஸை தசரா திருவிழாக்காள் தொடங்குவதற்கு முன் போனஸ் அளிப்பது வழக்கம். அதுபோல இந்த ஆண்டும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த போனஸ் ரயில்வே பாதுகாப்பு படை மற்றும் ரயில்வே சிறப்பு பாதுகாப்பு படை வீரர்களுக்கு கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.