ஹபராதுவ – பிலான பகுதியிலுள்ள சுற்றுலா விடுதியொன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்த ஒருவர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காலி தெக்கல்லகொட பகுதியைச் சேர்ந்த 27 வயதான நபர் ஒருவரே இவ்வாறு காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபர் காயமடைந்த நிலையில், நேற்றிரவு 10 மணியளவில் குறித்த சுற்றுலா விடுதியின் பாதுகாப்பு உத்தியோகத்தரால் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காயமடைந்தவரிடம் கையடக்கத் தொலைபேசி மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன இருந்துள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவத்தில் காயமடைந்தவர் இன்னும் சுயநினைவுக்கு வரவில்லை உனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்தச் சம்பவம் தொடர்பிலான பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.