பொலிஸ் திட்டமிட்ட குற்றத்தடுப்புப் பிரிவினரால் முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கைது செய்யப்பட்டுள்ளார்.
வாக்குமூலம் வழங்குவதற்காக பொலிஸ் திட்டமிட்ட குற்றத்தடுப்புப் பிரிவிற்கு தமது சட்டத்தரணிகளுடன் ஆஜராகிய சந்தர்ப்பத்திலேயே, அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.
எல்.டி.டி.ஈ. அமைப்பு தொடர்பில் அவர் வௌியிட்ட கருத்து தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே இன்று அழைக்கப்பட்டிருந்தார்.
கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், இன்று முற்பகல் பிரதம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.