நீண்டகாலமாகச் சிறை களில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல்க் கைதிகளை விடுவிக்கவேண் டும் என்று வலியுறுத்தியும், சிறைச்சாலைகளில் உணவு ஒறுப்பில் ஈடுபட்டுவரும் அரசியல் கைதிகளுக்குப் பலம் சேர்க்கும் வகையிலும் யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்துக்கு முன்பாகவும், அச்சுவேலிப் பேருந்து நிலையத்துக்கு முன்பாகவும் இன்று கவனவீர்ப்புப் போராட்டங்கள் நடத்தப்படவுள்ளன.
யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்துக்கு முன்பாக பல்கலைக் கழக மாணவர்களால் கவனவீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இன்று காலை 11 மணிக்கு ஆரம்பமாகும் போராட்டத்தில் பேதங்கள் இன்றி அனைவரும் கலந்து கொள்ளவேண்டும் என்று யாழ்ப்பாணப் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது.
அச்சுவேலிப் பேருந்து நிலையம் முன்பாக முற்பகல் 10 மணிக்கு கவனவீர்ப்புப் போராட்டம் நடத்தப்படவுள்ளது.
யாழ்ப்பாணம் மாவட்ட பொது அமைப்புக்கள், அரசியல் கட்சிகள் இந்தப் போராட்டத்தை ஏற்பாடு செய்துள்ளன.
அரசியல் கைதிகளின் விடுதலைக்காக தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.