தனக்கு மக்கள் பாதுகாப்பு போதும் என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.
ஹங்வெல்லயில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் கூறினார்.
கொலை செய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட சதி முயற்சி குறித்து அவரிடம் வினவியபோதே கோட்டாபய ராஜபக்ஷ இவ்வாறு கூறினார்.
என்னை எல்.ரி.ரி.ஈ. யினரும் கொலை செய்ய முயற்சித்தனர். இருப்பினும், எனது ஆயுள் அதிகமாக இருப்பதை நான் காண்கின்றேன். நான் பாதுகாப்பை அதிகரிக்குமாறு எந்தவித கோரிக்கைகளையும் விடுக்க வில்லை. எனக்கு மக்களின் பாதுகாப்பு போதுமாகும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

