கொழும்பு மாநகர சபை உறுப்பினர்களின் கொடுப்பனவை 20 ஆயிரம் ரூபாவினால் அதிகரிப்பதற்கு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
மாநகர சபையில் நேற்று (24) நடைபெற்ற மாதாந்த கூட்டத்தின் போது இந்த தீர்மானம் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேயர் ரோசி சேனாநாயக்கவினால் இது தொடர்பான பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கொழும்பு மாநகர சபை உறுப்பினர் ஒருவரின் சம்பளம் சகல கொடுப்பனவுகளும் அடங்களாக 34 ஆயிரதம் ரூபாவிலிருந்து 54 ஆயிரம் ரூபாவாக உயர்வடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.
நாட்டிலுள்ள ஏனைய மாநகர சபை உறுப்பினர்களுடைய கொடுப்பனவுகளையும் அதிகரித்துக் கொள்வதற்கு கொழும்பு மாநகர சபை முன்மாதிரியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

