மாகாண சபை தேர்தலுக்கான தொகுதி எல்லை நிர்ணயம் தொடர்பான அறிக்கையை பாராளுமன்றத்தில் முன்வைத்த மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி சபைகள் தொடர்பான அமைச்சர் பைஸர் முஸ்தபா அறிக்கைக்கு எதிராக தனது வாக்கைப் பயன்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த அறிக்கை தொடர்பில் நேற்று (24) இரவு பாராளுமன்றத்தில் இடம்பெற்ற வாக்கெடுப்பில், அறிக்கைக்கு ஆதரவாக எவரும் வாக்களிக்கவில்லை என்பதோடு, அதற்கு எதிராக 139 பேர் வாக்களித்தனர்.
ஆரம்பம் முதல் அறிக்கைக்கு ஆதரவாக சபையில் கருத்துகளை தெரிவித்த மக்கள் விடுதலை முன்னணி கூட வாக்கெடுப்பின்போது சபையில் இருக்கவில்லையென தெரிவிக்கப்படுகின்றது.
ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சி, ஐக்கிய தேசிய முன்னணி, ஒன்றிணைந்த எதிர்க்கட்சி உட்பட ஏனைய அனைத்துக் கட்சிகளின் உறுப்பினர்களும் அறிக்கைக்கு எதிராகவே தனது வாக்கைப் பயன்படுத்தியுள்ளனர்.
மாகாண சபைத் தேர்தல்கள் சட்டத்தின் 3 அ. (11) ஆம் பிரிவின் பிரகாரம் அந்த அறிக்கை 2/3 பெரும்பான்மை வாக்குகளினால் பாராளுமன்றத்தினால் அங்கீகரிக்கப்பட வேண்டியிருந்தது.
மாகாண சபைகள், உள்ளூராட்சி அமைச்சரினால் கடந்த 2018.03.06 அன்று குறித்த அறிக்கை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

