திருப்புத்துார் தென்மாப்பட்டைச் சேர்ந்தவர் துரைராஜ். இவர் மலேசிய குடியுரிமைப் பெற்று மலேசிய வானொலியில் பணியாற்றி பின்னர் தமிழ்நேசன் பத்திரிகை ஆசிரியர், மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்க தலைவர் ஆக பணியாற்றினார். மலேசிய தமிழ் பத்திரி்கை துறை பிதாமகர் என்றழைக்கப்பட்டார். இவர் நேற்று தனது 84 வயதில் கோலாலம்பூரில் காலமானார்..

