தனது பதவி காலத்தின் போது ஊழல் செய்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தென் கொரிய மாஜி அதிபர் பார்க் கியூன்-ஹைக்கு அந்நாட்டு நீதிமன்றம் 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.
முன்னதாக அவருக்கு 24 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மேலும் ஓராண்டு சிறை தண்டனை நீடிக்கப்பட்டது. இதனை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்யவில்லை.

