ஆஸ்திரேலியாவின் பிரதமராக, ஸ்காட் மோரிசன், 50பதவியேற்றார்.ஆஸ்திரேலியாவில், லிபரல் கட்சி தலைமையிலான கூட்டணி அரசு நடந்து வருகிறது. இந்நாட்டின் பிரதமராக, மால்கம் டர்ன்புல், ௨௦௧௫ முதல் பணியாற்றி வந்தார்.
ஆஸ்திரேலிய பார்லி மென்டிற்கு, அடுத்த ஆண்டு தேர்தல் நடக்க உள்ளது.இப்போது, எதிர்க்கட்சியாக உள்ள, தொழிலாளர் கட்சி, அடுத்த தேர்தலில், வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாக கருத்து கணிப்புகள் வெளியாகின.
இதையடுத்து, ஆளும் கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டது. இதனால், லிபரல் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல் கடந்த வாரம் நடந்தது.
இதில், பிரதமர் டர்ன்புல்லும், முன்னாள் உள்துறை அமைச்சர், பீட்டர் டட்டனும் போட்டியிட்டனர். இந்த தேர்தலில், டர்ன்புல் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
எனினும், இதில் சர்ச்சை ஏற்பட்டதால், இரண்டாவது முறையாக ஓட்டெடுப்பு நடத்த, கட்சி கூட்டத்தை டர்ன்புல் கூட்டினார்.
அப்போது, ‘தலைமையை மாற்ற வேண்டும்’ எனக் கோரி, பெரும்பான்மையான உறுப்பினர்கள் கையெழுத்திட்டிருந்த கடிதம், டர்ன்புல்லிடம் வழங்கப்பட்டது.இதனால், புதிய பிரதமரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நேற்று நடந்தது.
இதில், லிபரல் கட்சியின் பொருளாளர், மோரிசன், – முன்னாள் உள்துறை அமைச்சர், பீட்டர் டட்டனை, ௪௫ – ௪௦ என்ற ஓட்டுகள் வித்தியாசத்தில் வென்றார்.
ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமராக, மோரிசன் பதவியேற்றார். அவருக்கு, கவர்னர் ஜெனரல், பீட்டர் காஸ்குரோவ், பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
ஆஸ்திரேலியாவில் கடந்த, ௧௦ ஆண்டுகளில், நான்கு பேர் பிரதமர் பதவியில் இருந்து அகற்றப்பட்டுள்ளனர். ஐந்தாவது பிரதமராக, தற்போது மோரிசன் பதவியேற்றுள்ளார்.

