சிங்கப்பூர் தேசியக் கொடியை கைகளால் கிழித்து, அதற்குள், இந்திய தேசியக் கொடி தெரிவது போல் தோற்றம் உடைய படம் இடம்பெற்ற, ‘டி – ஷர்ட்’ புகைப்படத்தை, ‘பேஸ்புக்’ சமூக வலைதளத்தில் வெளியிட்ட இந்தியரிடம், அந்நாட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.ஆசிய நாடான, சிங்கப்பூரில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, அவிஜித் தாஸ் பட்நாயக் என்பவர் வசித்து வருகிறார்.
இவர், ஆக., 14ல், சிங்கப்பூர் தேசியக் கொடியை கைகளால் கிழித்து, அதற்குள், இந்திய தேசியக் கொடி தெரிவது போல் தோற்றம் உடைய படம் இடம்பெற்ற, டி – ஷர்ட் புகைப்படத்தை, பேஸ்புக்கில் பதிவிட்டார்.இந்த புகைப்படம், சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இதையடுத்து, அந்த இளைஞரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.அவிஜித் தாஸ் பட்நாயக் கூறியதாவது:டி – ஷர்ட்டை, நான் வடிவமைக்கவில்லை. சிங்கப்பூரை நான் பெரிதும் நேசிக்கிறேன். அந்நாட்டு தேசியக் கொடிக்கு அவமரியாதை ஏற்படுத்தும் நோக்கில், நான் பதிவிடவில்லை.
சர்ச்சைக்கு காரணமான என்னை மன்னித்து விடுங்கள்.இவ்வாறு அவர் கூறினார்.’ஸ்டார்ட் அப்’ விருது: இந்தியர்கள் வெற்றிசிங்கப்பூரில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, அக் ஷய் குப்தா, விநாயக், சச்சின் சஞ்சீவ் ஆகியோர், முதுகலை பட்டப் படிப்பு படித்து வருகின்றனர்.
இவர்கள், சமீபத்தில் நடந்த, ‘ஸ்டார்ட் அப் ஐடியா’ போட்டியில் வெற்றி பெற்றனர். மருத்துவ காப்பீடு தொடர்பான தீர்வுகளை, தன்னிச்சையாக செயல்படுத்துவது தொடர்பாக, இவர்கள் அளித்த திட்டம் வெற்றி பெற்றது. இவர்களுக்கு பரிசாக, 5.5 லட்சம் ரூபாய் மற்றும் கோப்பை வழங்கப்பட்டது.

