இங்கிலாந்து மருத்துவமனையில் பிரேத பரிசோதனை அறிக்கையில் தொடர்ச்சியாக தவறுகள் செய்த இந்திய டாக்டர் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இங்கிலாந்தின் மான்செஸ்டரில் உள்ள ராயல் ஓல்ட்ஹாம் மருத்துவமனையில் நோயியல் டாக்டராக பணியாற்றுபவர் காலித் அகமது. இவர், பிரேத பரிசோதனைக்கு வரும் உடல்களை ஆய்வு செய்து, அறிக்கை அளிப்பார்.
பல்வேறு பிரேத பரிசோதனை அறிக்கை சமர்ப்பித்துள்ள அவர் மீது கடந்த ஆண்டு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. காலித் தந்த அறிக்கைகள் பெரும்பாலும் தவறானவையாகவே இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
மரணம் நிகழ்ந்ததற்கான காரணங்களில் தவறு செய்திருக்கிறார். உடல் பாகங்களை கூட அவர் சரியாக குறிப்பிடவில்லை.
எனவே, காலித் உண்மையிலேயே மருத்துவ பயிற்சிகள் பெற்றவர் தானா அல்லது வேண்டுமென்றே மரணத்திற்கான தகவல்களை மறைத்து பொய்யான அறிக்கை தந்தாரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காலித் அகமது கடந்த 1989ம் ஆண்டில் பெங்களூருவில் மருத்துவ படிப்பை முடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
