வட மாகாணத்தில் வறட்சி காரணமாக 91,639 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
கிளிநொச்சி – பச்சிலைப்பள்ளி, பளை பகுதியில் குளத்து நீர் வற்றியதால் நீர்வாழ் உயிரினங்கள் அல்லலுறுகின்றன.
கிளிநொச்சி மாவட்டத்தில் பச்சிலைப்பள்ளி மற்றும் கண்டாவளை பகுதிகளிலேயே அதிக வறட்சி நிலவுகிறது .
கால்நடைகளும் பறவைகளும் நீரின்றி பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளன.
வட மாகாணத்தில் வறட்சியால் சுமார் 319,551 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தில் சுமார் 24,000 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.