யாழ்ப்பாணம் – சாவகச்சேரி அரசடி பகுதியில் ரயிலுடன் மோதி 2 பேர் உயிரிழந்துள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்தானது இன்று (புதன்கிழமை) இரவு 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதில் மோட்டார் சைக்கிளில் சென்றவர்களே உயிரிழந்ததாகவும், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.