கொழும்பு மற்றும் புறநகர் பிரதேசங்களில் உள்ளக நீர் ஓடைகள் மற்றும் ஆற்றின் ஊடான பயணிகள் போக்குவரத்து வேலைத்திட்டமொன்றை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.
இதன்படி பத்தரமுல்லையிலிருந்து வெள்ளவத்தை வரையான நீர் கால்வாய் ஊடாகவும் , கொழும்பு கோடையிலுள்ள பேர வெவ ஊடாக ஜுனியன் பிளேஸ் வரையும் களனி கங்கையூடாக மட்டக்குளியிலிருந்து ஹங்வெல்ல வரையும் இந்த போக்குவரத்து திட்டத்தை முன்னெடுக்கப்படவுள்ளது.
இது தொடர்பாக நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன் மூலம் கொழும்பு போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் மக்களுக்கு விடுதலை ஒன்று கிடைக்கும் என கூறப்படுகின்றது.