Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஜெயலலிதாவின் வாரிசுகள் என்பதை நிரூபிப்போம் டி.டி.வி.தினகரன்

June 4, 2018
in News, Politics, World
0
ஜெயலலிதாவின் வாரிசுகள் என்பதை நிரூபிப்போம் டி.டி.வி.தினகரன்

சென்னை அசோக்நகரில் உள்ள நடேசன் சாலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் (அ.ம.மு.க.) தலைமை அலுவலகம் புதிதாக அமைக் கப்பட்டுள்ளது. இதனை நேற்று நடந்த விழாவில் அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

இதையடுத்து குத்துவிளக்கு ஏற்றி, அ.ம.மு.க. தலைமை அலுவலகத்தின் செயல்பாடுகளையும் அவர் தொடங்கி வைத்தார். இதன் பின்னர் கட்சி அலுவலகத்தில் பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோருடைய படங்களுக்கு டி.டி.வி.தினகரன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். தலைமை அலுவலகத்தில் கட்சி பணிகளையும் அவர்
உடனடியாக தொடங்கினார். கட்சி அலுவலகத்தின் வெளியே திரண்டிருந்த தொண்டர்கள் மத்தியில் டி.டி.வி.தினகரன் பேசியதாவது.

எம்.ஜி.ஆர். மறைவுக்கு பின்னர் ஜெயலலிதா தலைமை கழகத்தை பெறுவதற்கும், அ.தி.மு.க.வை தொண்டர்களிடம் மீண்டும் சேர்ப்பதற்கும் ஆழ்வார்பேட்டை அசோக் தெருவில் அலுவலகத்தை தொடங்கினார். அ.தி.மு.க. வையும் மீட்டெடுத்தார். 30 ஆண்டுகளுக்கு பின்னர் ஜெயலலிதா வளர்த்த இயக்கத்தை மீட்டெடுப்பதற்காக அசோக்நகரில் நாம் அலுவலகத்தை திறந்திருக்கிறோம்.

அ.தி.மு.க.வையும், தலைமை கழகத்தையும் மீட்டெடுக்கும் வரை இந்த இடத்தில் அலுவலகம் இயங்கும். தலை நிமிர்ந்த இயக்கமாக வெற்றி நடைபோட்ட இயக்கம், இன்று தத்தி, தத்தி…மண்டியிட்டு அடிமைகளின் ராஜ்ஜியமாக திகழ்கிறது. மீண்டும் இதை தொண்டர்கள் கையில் சேர்ப்பதற்கு தியாக தலைவி சசிகலா தலைமையில் போராடிக்கொண்டிருக்கிறோம். அ.தி.மு.க. என்ற மக்கள் இயக்கத்தை மீட்டெடுப்பதற்கும், இரட்டை இலையை மீட்டெடுப்பதற்காகவும் நாம் செயல்பட்டுக்கொண்டிருக்கிறோம்.

இரட்டை இலையை மீட்டெடுப்பதற்கும், அ.தி. மு.க.வை மீட்டெடுப்பதற்கும் முதல் கட்டமாக ஆர்.கே.நகரில் சுயேச்சையாக போட்டியிட்டு மாபெரும் வெற்றி பெற்றோம். ஆர்.கே.நகரில் நிரூபித்தது போல வரும் தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாம் தான் ஜெயலலிதாவின் வாரிசுகள் என்பதை நிரூபிப்போம். நிச்சயம் நாம் கோட்டையில் கொடி ஏற்றுவோம். மக்கள் விரும்பும் ஆட்சியை நாம் கொடுப்போம். அனைத்து தரப்பினரின் கோரிக்கைகளை நிறைவேற்றி தருவோம்.

படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி தருவோம் என்று உறுதி கூறுகிறேன். அ.ம.மு.க.வுக்கு அலுவலகம் அமைக்க சென்னையில் யாருமே இடம் தராத போது, முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையா இடம் கொடுத்தார். இவ்வாறு அவர் கூறினார்.

சசிகலா புஷ்பா எம்.பி., ஜெயா தொலைக்காட்சியின் தலைமை செயல் இயக்குனர் விவேக் ஜெயராமன், முன்னாள் அமைச்சர்கள் பழனியப்பன், செந்தில்பாலாஜி, இசக்கி சுப்பையா உள்பட பலர் விழாவில் கலந்துகொண்டனர்.

Previous Post

மத்திய தரைக்கடல் பகுதியில் புலம்பெயர்ந்தோர் படகு மூழ்கியது; 50 பேர் பலி

Next Post

டெல்லியில் கவர்னர் மற்றும் துணை நிலை கவர்னர்கள் மாநாடு

Next Post
டெல்லியில் கவர்னர் மற்றும் துணை நிலை கவர்னர்கள் மாநாடு

டெல்லியில் கவர்னர் மற்றும் துணை நிலை கவர்னர்கள் மாநாடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

யாழில் இராணுவம் மரக்கறிகளை விற்பனை செய்வது நிரூபணம் : பாதுகாப்பு பிரதியமைச்சரின் பொய் அம்பலம்

யாழில் இராணுவம் மரக்கறிகளை விற்பனை செய்வது நிரூபணம் : பாதுகாப்பு பிரதியமைச்சரின் பொய் அம்பலம்

July 14, 2026
மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிக்கும் ‘ட்ரெயின்’ படத்தின் இசை மற்றும் டீசர் வெளியீடு

மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிக்கும் ‘ட்ரெயின்’ படத்தின் இசை மற்றும் டீசர் வெளியீடு

July 14, 2026
விம்பின்டன் ஒற்றையர் சம்பியன் பட்டங்களை லிண்டா, சின்னர் ஆகியோர் சுவீகரித்தனர்

விம்பின்டன் ஒற்றையர் சம்பியன் பட்டங்களை லிண்டா, சின்னர் ஆகியோர் சுவீகரித்தனர்

July 13, 2026
தமிழ் பேசும் அரசியல் கட்சிகள் இணைந்து செயற்பட இணக்கப்பாடு

தமிழ் பேசும் அரசியல் கட்சிகள் இணைந்து செயற்பட இணக்கப்பாடு

July 13, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures