கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி கலந்தர் லெப்பே மொஹமட் ரனீஸ் மற்றும் அப்துல் ரஹீம் மொஹமட் ஆகியோரை விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை மஜிஸ்ட்ரேட் நீதிபதி எச்.எம். மொஹமட் பசீல் உத்தரவிட்டுள்ளார்.
அம்பாறை சம்மாந்துரை பொலிஸ் பிரிவிக்குட்பட்ட வலதாபிடிய கிராமத்தில் புராதன நிலப் பகுதியை இயந்திரங்கள் மூலம் அழிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே இவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் நேற்று(01) உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 12 ஆம் திகதி சம்பாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வலதாபிடிய கிராமத்திற்கு அருகிலுள்ள காணியில் காணப்பட்ட கல் ஒன்றை உடைத்து சட்டவிரோத அபிவிருத்தி நடவடிக்கையொன்றை மேற்கொள்வதாக அம்பாறை பொலிஸுக்கு அறிவித்தல் வழங்கப்பட்டதன் பின்னர் இது தொடர்பான விசாரணையைப் பொலிஸார் ஆரம்பித்துள்ளதாகவும் சகோதர மொழி ஊடகமொன்று தெரிவித்துள்ளது.