Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தென்னிலங்கை மீனவர்களுக்கு உள்ளூர் மீனவர்கள் ஒத்துழைப்பு

May 31, 2018
in News, Politics, World
0

வட­ம­ராட்சி கிழக்­கில் தென்­னி­லங்கை மீன­வர்­கள் வந்து தங்­கி­யி­ருந்து தொழில் செய்­வ­தற்கு திணைக்­க­ளங்­கள் எந்த அனு­ம­தி­யை­யும் வழங்­க­வில்லை. உள்­ளூர்­வா­சி­கள் சிலரே, தமது பகு­தி­க­ளில் தென்­னி­லங்கை மீன­வர்­கள் வந்து தங்­கி­யி­ருந்து தொழில் நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்க ஒத்­து­ழைப்பு வழங்­கு­கின்­ற­னர்.

இவ்­வாறு வட­ம­ராட்சி கிழக்கு பிர­தேச செய­லக மற்­றும் கடற்­தொ­ழில் நீரி­யல்­வ­ளத் திணைக்­கள உயர் அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.

வட­ம­ராட்சி கிழக்­கில் தென்­னி­லங்கை மீன­வர்­கள் பெரும் எடுப்­பில் வந்து தங்­கி­யி­ருந்து கடல் அட்டை பிடிக்­கும் நட­வ­டிக்­கை­யில் ஈடு­பட்­டுள்­ள­னர். உள்­ளூர் மீன­வர்­கள் எதிர்ப்­புத் தெரி­வித்து வரு­கின்­ற­னர். இதற்கு எதி­ரா­கப் போராட்­டம் நடத்­து­வ­தற்­காள முயற்­சி­க­ளும் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன.தென்­னி­லங்கை மீன­வர்­கள் வந்து தங்­கி­யி­ருந்து தொழில் நட­வ­டிக்­கை­யில் ஈடு­ப­டு­வ­தற்கு திணைக்­க­ளங்­கள் அனு­மதி வழங்­கி­யுள்­ளதா என்று கேட்­ட­போதே, அதி­கா­ரி­கள் மேற்­கண்­ட­வாறு கூறி­னார்.

2016ஆம் ஆண்டு வட­ம­ராட்சி கிழக்கு பிர­தேச செய­லக ஒருங்­கி­ணைப்­புக் குழுக் கூட்­டத்­தில், வெளி­மா­வட்ட மீன­வர்­கள் தங்­கி­யி­ருந்து தொழில் நட­வ­டிக்­கை­யில் ஈடு­ப­டு­வ­தற்கு எந்த அனு­ம­தி­யும் வழங்­கு­வ­தில்லை என்று தீர்­மா­னம் நிறை­வேற்­றப்­பட்­டி­ருந்­தது. அந்­தத் தீர்­மா­னம் கடந்த மாதம் இடம்­பெற்ற ஒருங்­கி­ணைப்­புக் குழுக் கூட்­டத்­தி­லும் மீண்­டும் நிறை­வேற்­றப்­பட்­டது.

இருப்­பி­னும், இத­னை­யும் மீறி வெளி­மா­வட்­டங்­க­ளி­லி­ருந்து வந்து தங்­கி­யி­ருந்து சிலர் தொழில் நட­வ­டிக்­கை­க­ளில் ஈடு­பட்டு வரு­கின்­றார்­கள். பொலி­ஸா­ரின் உத­வி­யு­டன் அவர்­களை வெளி­யேற்ற நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­கின்­றது. சில நாள்­க­ளுக்கு முன்­னர், அந்த வாடி­கள் அமைந்­துள்ள பிர­தே­சங்­க­ளில் துண்­ட­றிக்­கை­கள் ஒட்­டி­னோம். கால அவ­கா­சம் வழங்­கப்­பட்­டுள்­ளது.

இது தொடர்­பில் பொலிஸ் நிலை­யத்­தில் மீண்­டும் முறைப்­பாடு பதிவு செய்­யப்­பட்­டுள்­ளது. கட­லட்டை பிடிப்­ப­தற்கு கொழும்பு அரசு அனு­மதி வழங்­கி­யுள்­ளது. ஆனால் அவர்­கள் தங்­கி­யி­ருந்து தொழில் செய்­வ­தற்கு உள்­ளூர்­வா­சி­கள் சிலரே உத­வு­கின்­ற­னர். இவ்­வாறு அதி­கா­ரி­கள் குறிப்­பிட்­ட­னர்.

வட­ம­ராட்சி கிழக்­கில் உள்ள கடற்­தொ­ழில் சமா­சங்­கள் இந்த விவ­கா­ரம் தொடர்­பில் இன்று கூடி ஆரா­ய­வுள்­ளன. இந்­தப் பிரச்­சி­னைக்­காக விரை­வில் அவர்­கள் போராட்­டம் நடத்­த­வுள்­ள­தா­க­வும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

Previous Post

மத­கு­டன் மோதி­யது உந்­து­ருளி -ஒரு­வர் உயிரிழப்பு

Next Post

புதைக்கப்பட்ட கஞ்சா : தோண்டி எடுத்த அதிரடிப்படை

Next Post

புதைக்கப்பட்ட கஞ்சா : தோண்டி எடுத்த அதிரடிப்படை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures