பிரபல பாதாள உலக குழுவின் தலைவரான மாகந்துரே மதுஷின் முக்கிய உதவியாளர் ஒருவர் உள்ளிட்ட மூன்று பேர் ஹெரோய்ன் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காலி – லபுதுவ பிரதேசத்தில் வைத்து 10 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் நேற்று இரவு இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட ஹபுகல பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுடைய வக்வெல்லகமகே பிரதீப் தரங்க என்பவர் மாகந்துரே மதுஷின் முக்கிய உதவியாளராக அறியப்படுகிறார்.
கைது செய்யப்பட்ட ஏனைய இருவரும் 23 மற்றும் 33 வயதுடைய நியாகம பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் இன்று காலி நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.