ரஸ்யாவை சேர்ந்த பிரபல பத்திரிகையாளரான அர்கடி பாப்சென்கோ ( ArkadyBabchenko ) என்பவர் உக்ரைனின் தலைநகர் கெய்வில் வைத்து இனந்தெரியாத நபர்களினால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். இவர் உயிர்அச்சுறுத்தல் காரணமாக ரஸ்யாவில் இருந்து வெளியேறி உக்ரைனில் தஞ்சமடைந்து வாழ்ந்து வந்தநிலையில் இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.
நேற்றிரவு அவரது வீட்டில் வைத்து அவர்மீது இவ்வாறு துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.