ஆடை விற்பனை நிலையமொன்றின் மீது இன்று அதிகாலை துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனினும் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட நேரத்தில் பணியாளர்கள் எவரும் இருக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
மாத்தறை, நுபே பகுதியில் உள்ள ஆடை விற்பனை நிலையம் மீத இன்று அதிகாலை 1.20 மணியளவில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இனந்தெரியாத இருவரால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர்கள் தப்பிச் சென்றுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

