குருணாகல் மாவட்டத்தில் மாத்திரம் 15 வயதுக்கும் 19 வயதுக்கும் இடைப்பட்ட பாடசாலை மாணவர்களில் நூற்றுக்கு 60 வீதமானவர்கள் பல்வேறுபட்ட போதைப் பொருட்களுக்கு அடிமைப்பட்டவர்கள் என போதை ஒழிப்பு செயலணியின் பணிப்பாளர் டாக்டர் சமந்த கிதலவஆராச்சி தெரிவித்துள்ளார்.
மதுபானம், சிகரெட், கஞ்சா, தூள், மாத்திரை, லொசின்ஜர் போன்றவற்றுக்கே இம்மாணவர்கள் அடிமையாகியுள்ளதாகவும் டாக்டர் கூறியுள்ளார்.
இந்தப் போதைப் பொருள் பாவனையினால் ஞாபக சக்தி அதிகரிப்பதாகவும், தூக்கம் குறைவடைவதாகவும் தெரிவித்தே மாணவர்களுக்கு இந்த போதைப் பொருட்கள் வழங்கப்படுவதாகவும் டாக்டர் குறிப்பிட்டுள்ளதாக இன்றைய(24) சகோதர தேசிய ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.