Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Sports

வெற்றி தோல்வி எதைப்பற்றியும் கவலைப்படாமல் சென்னையுடன் மோதும் டெல்லி

May 19, 2018
in Sports
0

டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் இன்று நடைபெறும் ஐ. பி. எல். கிரிக்கெட் 52-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்சும், டெல்லி டேர்டெவில்சும் மோதுகின்றன.

டோனி தலைமையிலான சென்னை அணி இதுவரை ஆடிய 12 ஆட்டங்களில் 8 வெற்றி, 4 தோல்வி என 16 புள்ளிகளுடன் தற்போது பட்டியலில் 2-வது இடம் வகிக்கிறது. ஏற்கனவே பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பை தொட்டு விட்ட நிலையில் இன்று களம் காண்கிறது.

சென்னை அணி 5 நாட்கள் ஓய்வுக்கு பிறகு புத்துணர்ச்சியுடன் இன்று 13வது ஆட்டத்தை ஆட இருக்கிறது. இந்த அணியில் இதுவரை 535 ரன் எடுத்த அம்பதி ராயுடு, ஷேன் வாட்சன் 424 ரன்கள், கேப்டன் டோனி 413 ரன்கள், சுரேஷ் ரெய்னா 315 ரன்கள் என பேட்டிங்கில் தொடர் முன்னிலை வகிக்கும் வீரர்கள் இருப்பதால் பேட்டிங் குறித்த கவலை இந்த அணிக்கு இல்லை.

அதே போல பீல்டிங்கிலும் சொதப்பாமல் ஆடி வருகிறார்கள்.

இந்த அணியின் பந்து வீச்சாளர்களாகிய ஷர்துல் தாகூர் 11 விக்கெட், வெய்ன் பிராவோ 9 விக்கெட், தீபக் சாஹர் 7 விக்கெட் எடுத்து அணியின் ஆணி வேராக இருக்கிறார்கள். பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட சுழற்பந்து வீச்சாளர்கள் ரவீந்திர ஜடேஜா, ஹர்பஜன்சிங் ஆகியோர் இதுவரை பெரியஅளவில் சோபிக்க வில்லை.

இன்றைய ஆட்டத்திலாவது இவர்கள் பந்து வீச்சு சிறப்பாக அமையுமா என்று தெரியவில்லை. ஐ. பி. எல்.

வரலாற்றில் இறுதிப்போட்டிக்கு முன்னேறாத ஒரே அணி டெல்லி டேர்டெவில்ஸ். இந்தத் தொடரில் இதுவரை ஆடிய ஆட்டங்களில் 3 வெற்றி, 9 தோல்விகளுடன் கடைசி இடத்தில் உள்ளது.

ஆனாலும் ஆடுகளத்தில் முகத்தில் எந்த வித தோல்வியையும் காட்டிக் கொள்ளாமல் எதார்த்தமான நிலையில் இந்த அணியின் ஒட்டு மொத்த வீரர்களும் விளையாடி வருவது கிரிக்கெட் பார்வையாளர்கள் அனைவருக்கும் ஆச்சயர்த்தை உண்டாக்கி இருக்கிறது.

ரிஷாப் பன்ட் 582 ரன்கள், கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் 386 ரன்கள், பிரித்வி ஷா 216 ரன்கள் எடுத்து இந்த அணியின் நட்சத்திர ஆட்டக்காரர்களாக கலக்கி வருகிறார்கள். பந்து வீச்சில் டிரென்ட் பவுல்ட் தவிர மற்றவர்கள் பார்மில் இல்லை.

இதே போல் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மேக்ஸ்வெல், அபிஷேக் ஷர்மா, ஹர்ஷல் பட்டேல், அமித் மிஸ்ரா ஷபாஸ் நதீம், சந்தீப் லாமிச்சன்னே, ஜூனியர் டாலா, டிரென்ட் பவுல்ட் ஆகியோர் இன்னும் சிறப்பாக விளையாடாதது டெல்லியை தோல்வியில் தள்ளி இருக்கிறது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றாலும் கடந்த கால தோல்விகள் இவர்களுக்கு மிகப் பெரிய தடையாக முன் நிற்கிறது.

Previous Post

ஐசிசி முடிவுக்கு வீரர்கள் எதிர்ப்பு

Next Post

ஹரிக்கேன் ரிலீஃப் டிவென்டி 20 சேலஞ்ச் போட்டியில் சந்தீப் லாமிச்சானேவுக்கு வாய்ப்பு

Next Post

ஹரிக்கேன் ரிலீஃப் டிவென்டி 20 சேலஞ்ச் போட்டியில் சந்தீப் லாமிச்சானேவுக்கு வாய்ப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

அரசாங்கத்திற்கு மகிந்தவின் சாட்டையடி பதில்!

மகிந்தவின் மகன் யோஷிதவின் வழக்கு! நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு

July 17, 2026
சண்முக பாண்டியன் விஜயகாந்த் நடிக்கும் ‘வாணவேடிக்கை’ படத்தின் தொடக்க விழா

சண்முக பாண்டியன் விஜயகாந்த் நடிக்கும் ‘வாணவேடிக்கை’ படத்தின் தொடக்க விழா

July 17, 2026
போதைப்பொருள் உட்கொண்டு வாகனங்களை செலுத்திய 790 சாரதிகள் கைது

கொழும்பில் ஆசிரியையும் அவரது கணவரும் 2 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் கைது

July 16, 2026
வடக்கு, கிழக்கில் தமிழரின் காணிகளை தொல்லியல் திணைக்களம் பலவந்தமாக கையகப்படுத்தவில்லையாம்….

பாட அடிப்படையில் 30,000 புதிய ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை – அமைச்சர் சந்தன அபேரத்ன

July 16, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures