புதிய களனி பாலத்தின் திருத்தப்பணிகள் காரணமாக கொழும்பு கண்டி பிரதான வீதியுடனான போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இன்று முதல் எதிர்வரும் 5 ஆம் திகதி வரையான காலப்பகுதியிலே இவ்வாறு போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளது.
இதன் காரணமாக குறித்த பகுதியில் வாகன நெரிசல் ஏற்படக் கூடும் எனவும் வாகன சாரதிகள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறும் பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.