Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நிர்மலா தேவி வழக்கை விசாரிக்கப் போகும் ஆர்.சந்தானம் யார்?

April 18, 2018
in News, Politics, World
0
நிர்மலா தேவி வழக்கை விசாரிக்கப் போகும் ஆர்.சந்தானம் யார்?

தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் பேராசிரியை நிர்மலாதேவி பிரச்னையில், ஆளுநர் உட்பட பலரது பெயர்கள் விமர்சனத்துக்குள்ளாகின்றன. இதற்கெல்லாம் முடிவாக ஆளுநர் நேற்று பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசினார். இந்தப் பிரச்னையை விசாரிக்க ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆர்.சந்தானம் தலைமையிலான குழுவையும் அமைத்துள்ளார். யார் இந்த ஆர்.சந்தானம்?

என்ன பிரச்னை?

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் பெற்ற, அருப்புக்கோட்டை தேவாங்கர் கலை அறிவியல் கல்லூரியில் கணிதத் துறை உதவிப் பேராசிரியையாகப் பணியாற்றி வரும் பி.நிர்மலா தேவி, கல்லூரி மாணவிகளைத் தவறானப் பாதைக்குத் திருப்ப முயன்றதாக வெளியாகியிருக்கும் ஆடியோ, தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, நிர்மலா தேவி மீது கல்லூரி நிர்வாகம் சார்பில் காவல்துறையிடம் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், அவர்மீது 3 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு நேற்று முன்தினம் ஏப்ரல் 16-ம் தேதி கைது செய்யப்பட்டார்.

பல்கலைக்கழகத்தின் வேந்தர் என்ற முறையில், இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆர்.சந்தானம் தலைமையிலான உயர்மட்டக் குழு ஒன்றை அமைத்து தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உத்தரவிட்டுள்ளார். நாளை முதல் அருப்புக்கோட்டையில் உள்ள கல்லூரியிலிருந்து இந்த விசாரணையை ஆர்.சந்தானம் தொடங்குகிறார். மேலும், இந்த விசாரணை தொடர்பான முழு அறிக்கையையும், இம்மாதம் 30 ஆம் தேதிக்குள் சந்தானம் சமர்ப்பிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆர்.சந்தானம், சென்னையில் உள்ள பிரெசிடென்சி கல்லூரியில் முதுகலை படிப்பில் வேதியியல் பட்டம் பெற்றவர். மேலும், சென்னைப் பல்கலைக்கழகத்தில் பொது நிர்வாகம் மற்றும் பொருளாதாரத்தில் முதுநிலை பட்டங்களையும், இங்கிலாந்தில் உள்ள ஹல் பல்கலைக்கழகத்தில், எம்.பி.ஏ. பட்டப் படிப்பையும் முடித்துள்ளார்.

1972 ஆம் ஆண்டு பேட்ச் ஐ.ஏ.எஸ் அதிகாரியான ஆர்.சந்தானம், ஒருங்கிணைந்த ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராகப் பதவி வகித்தார். மேலும், நிதித்துறை செயலாளர், போக்குவரத்து, திட்டக்கமிஷன், உணவு மற்றும் கூட்டுறவு, தமிழக சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷனின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர், வணிகவரித்துறை, சி.எம்.டி.ஏ துணைத்தலைவர் என்று பல்வேறு பதவிகளையும் வகித்துள்ளார். இவர் மூன்று ஆளுநர்களுக்குச் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். மேலும், முதலமைச்சரின் தலைமை செயலகத்திலும் செயலாளராகப் பணியாற்றியுள்ளார்.

2002-2003 ஆம் ஆண்டு தமிழகம் மோசமான வறட்சியை எதிர்கொண்டபோது மாநிலத்தின் நிவாரண ஆணையராகப் பணிபுரிந்தார். 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளம், 2005 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி பேரழிவு போன்ற நிகழ்வுகளில் மீட்புப்பணியில் ஈடுபட்டு மிகச்சிறப்பாகச் செயல்பட்டதாலும், அவரது மேற்பார்வையின் கீழ் அரசால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் அனைத்தும் சிறப்பாக இருந்ததாலும் தேசிய மற்றும் மாநில அளவிலான ஊடகங்களால் அதிகமாகப் பாராட்டப்பட்டார். இந்திய அரசாங்கத்தால், மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்டபோது ஐ.ஏ.எஸ் பதவியிலிருந்து தானாக முன்வந்து ஓய்வு பெற்றார். இதன் பதவிக்காலம் 5 ஆண்டுகள்.

பின் அந்தப் பதவியிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு, தன்னார்வப் பணிகளில் செயல்பட்டு வருகிறார். சென்னையில் உள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில், நுகர்வோர் சட்டம் மற்றும் நீதித்துறைப் பிரிவின் தலைவராக நியமிக்கப்பட்ட இவர், இந்தியாவின் நுகர்வோர் சங்கத்தின் அறக்கட்டளையில் உறுப்பினராகவும் இருந்துள்ளார்.

Previous Post

16 பேரும் எதிர்க் கட்சியில் அமர்வது குறித்து அறிவிக்கவில்லை

Next Post

அன்று 2 எம்.பி-க்கள்; இன்று 20 மாநிலங்களில் ஆட்சி

Next Post

அன்று 2 எம்.பி-க்கள்; இன்று 20 மாநிலங்களில் ஆட்சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures