ஐக்கிய தேசியக் கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் உட்பட அரசாங்கத்தின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை இன்று (07) பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.
இந்த அறிக்கை கையளிக்கப்பட்டதன் பின்னர் கட்சியின் மறுசீரமைப்பு மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாகவும் அக்கட்சி வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.