வவுனியா, புதிய பேரூந்து நிலையத்தில் புகைப்பிடிப்பவர்களால் பயணிகள் பல்வேறு அசௌகரியங்களை எதிர் நோக்கி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
வவுனியா புதிய பேரூந்து நிலையத்தில் உள்ள உணவகத்தில் சிகரெட் உள்ளிட்ட புகைத்தல் பொருட்களை பெற்றுக் கொள்பவர்கள் அதனை பொது இடங்களில் பயன்படுத்துவதனால் ஏனையோரும் சுவாசிக்க வேண்டிய நிலைமை உருவாகியுள்ளது.
குறிப்பாக இப்பகுதிகளுக்கு வந்து செல்லும் சிறுவர்கள், பெண்கள் மற்றும் பெரியவர்கள் எனப் பலரும் பாதிக்கப்டுகின்றனர்.
இதனால் இவ்விடயம் தொடர்பில் உரிய அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் மேலும், குறித்த பேரூந்து நிலையத்திற்குள் புகைத்தல் பொருட்களை விற்பனை செய்யவும் தடை விதிக்க வேண்டுமென, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.













