Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இலங்­கை­யின் இறை­யாண்­மையை மீறும் வகை­யில் ஐ.நா.செயற்படுகிறது

March 16, 2018
in News, Politics, Uncategorized, World
0

ஐ.நா. மனித உரி­மை­கள் சபை­யா­னது இலங்­கை­யின் இறை­யாண்­மையை மீறும் வகை­யில் உள்­நாட்டு விவ­கா­ரங்­க ­ளில் தொடர்ந்­தும் தலை­யிட்டு வரு­கின்­றது. ஐ.நா. மனித உரி­மை­கள் சபை இலங்­கை­யி­லுள்ள சட்­டத்­துக்கு மேலா­ன­தல்ல.

இவ்­வாறு முன்­னாள் பிரதி அமைச்­ச­ரும் முன்­னாள் கடற்­படை அதி­கா­ரி­யு­மான ரியல் அட்­மி­ரல் சரத் வீர­சே­கர தெரி­வித்­துள்­ளார்.

ஐ.நா. மனித உரி­மை­கள் சபை­யின் 37ஆவது கூட்­டத் தொடர் கடந்த மாதம் 26ஆம் திகதி ஆரம்­ப­மாகி நடை­பெற்று வரு­கின்­றது. முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்ச ஆத­ரவு அணி சார்­பில் சரத் வீர­சே­கர தலை­மை­யி­லான குழு பங்­கு­பற்றி வரு­கின்­றது. மனித உரி­மை­கள் சபை­யில் நேற்று நடை­பெற்ற உப­கு­ழுக் கூட்­ட­மொன்­றில் கலந்­து­கொண்டு உரை­யாற்­றி­ய­போதே அவர் மேற்­கண்­ட­வாறு கூறி­னார். அவர் மேலும் தெரி­வித்ததா­வது:

30/1 தீர்­மா­னத்தை இலங்கை நடை­மு­றைப்­ப­டுத்­தும் விதம் பற்றி மனித உரி­மை­கள் சபை­யின் ஆணை­யா­ளர் சயிட் அல்­ஹூ­சைன் தனது வாய்­மூல அறிக்­கை­யில் கருத்­துக்­களை வெளி­யிட்­டுள்­ளார்.

இலங்கை இரா­ணு­வம் போர்க்­குற்­றங்­க­ளில் ஈடு­பட்­டுள்­ள­தா­கக் கூறப்­பட்ட மனித உரி­மை­கள் சபை ஆணை­யா­ள­ரின் அறிக்­கைக்கு எதி­ராக நான் இரண்டு அறிக்­கை­களை 2014ஆம் ஆண்டு மனித உரி­மை­கள் சபை­யில் சமர்ப்­பித்­தி­ருந்­தேன். அதில் அனைத்து விட­யங்­க­ளும் தெளி­வா­கக் கூறப்­பட்­டுள்­ளன.2015ஆம் ஆண்டு அமெ­ரிக்கா கொண்­டு­வந்­தி­ருந்த 30/1 கீழ் தீர்­மா­னத்­துக்கு இலங்கை அய­லு­ற­வுத்­துறை அமைச்சு இணை அனு­ச­ரணை வழங்­கி­யி­ருந்­தது. இதற்கு அரச தலை­வ­ரின் அனு­மதி பெறப்­ப­ட­வில்லை. இலங்கை நாடா­ளு­மன்­றின் அனு­ம­தி­யும் பெறப்­ப­ட­வில்லை.

இணக்­கப்­பா­டற்ற அறிக்­கை­யைத் தொடர்ந்து செயற்­ப­டுத்­து­வது மனித உரி­மை­கள் சபை­யின் சட்­டங்­களை மீறு­வ­தா­கும். அனைத்து இலங்­கை­யர்­க­ளின் மனித உரி­மை­க­ளை­யும் மீறும் செயற்­பா­டா­கும் -– என்­றார்.

Previous Post

அர்­ஜுன் மகேந்­தி­ர­னைக் கைது செய்யுமாறு உத்தரவு !!

Next Post

உறுப்­பி­னர்­க­ளின் பெயர்­களை உள்­ள­டக்­கிய அர­சி­தழ் 9ஆம் திக­தி­யி­டப்­பட்டே வெளி­யா­கும்

Next Post

உறுப்­பி­னர்­க­ளின் பெயர்­களை உள்­ள­டக்­கிய அர­சி­தழ் 9ஆம் திக­தி­யி­டப்­பட்டே வெளி­யா­கும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures