Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சட்டத்தை கையில் எடுக்க அரசாங்கம் அனுமதிக்க கூடாது ;எதிர்க்கட்சி தலைவர்

March 7, 2018
in News, Uncategorized, World
0

சட்டத்தை கையிலெடுத்து செயற்படும் நிலைமை ஏற்பட அரசாங்கம் யாருக்கும் இடமளிக்கக் கூடாது எனவும் நல்லாட்சியில் இனவாதம் தூண்டப்படுவதை ஒருபோதும் பொறுத்துக் கொள்ளவும் முடியாது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் சிறுபான்மை மக்களுக்கு எதிரான தொடர்ச்சியான சம்பவங்கள் சர்வதேச ரீதியில் அரசாங்கத்திற்கு நெருக்கடியை ஏற்படுத்தும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இனவாத செயற்பாடுகளை தடுக்க சட்டம் ஒழுங்கு ஏன் நடைமுறைப்படுத்தப்படவில்லை. அண்மைக் காலமாக இடம்பெறும் இனவாத செயற்பாடுகள் மிகவும் கண்டிக்கத் தக்கவை. அம்பாறை சம்பவம் தொடர்பில் சந்தேகம் உள்ளது. பொலிஸ் நிலையம் அருகில் இருந்த நிலையில் தாக்க வந்தவர்கள் பொலிஸாரின் காதினால் புகுந்து தப்பியுள்ளனர். இதன் பின்னணியில் உள்ள உண்மைத் நிலையை ஆராய வேண்டும்.

இளைஞர் ஒருவர் மீதான தாக்குதலை அடிப்படையாக வைத்து கண்டியில் வன்முறை இடம்பெற்றுள்ளது. பள்ளிவாசல்கள், வீடுகள் தாக்கப்பட்டன. உடைமைகள் வாகனங்கள் சேதமாக்கப்பட்டன. இவற்றை அனுமதிக்க முடியாது. மக்களுக்கு எதிரான வன்முறை தொடர்பில் சட்டம் ஒழுங்கு நிலை நாட்டப்படவில்லை.

சட்டத்தில் இருந்து தப்புவதற்காக வீடுகளை தீ வைத்து சேதம் செய்வது மேசமான நிலைமையை ஏற்படுத்தும். சம்பவம் நடந்து முடிந்த பின்னர் நடவடிக்கை எடுப்பதில் பயனில்லை. சட்டத்தை கையிலெடுத்து செயற்பட முடியும் என்று மக்கள் கருதுகின்றனரா.

இந்த தாக்குதல்களை நியாயப்படுத்த முடியாது.சகல இனத்தினருக்கும் சம உரிமையுள்ளது. சட்டம் சமமாக செயற்படுத்தப்பட வேண்டும்.

தாம் சிரேஷ்ட இனம் என யாராவது கருதி செயற்படுவார்களானால் அதற்கு இடமளிக்க முடியாது. கண்டியில் மூன்று, நான்கு அமைச்சர்கள் இருக்கிறார்கள். ஏன் அவர்களால் செயற்பட முடியவில்லை.

கடந்த காலங்களில் இலங்கையில் இவ்வாறான ஒரு இன ரீதியான அடக்குமுறைகள் இடம்பெற்றன. இவ்வாறான நிலையில் தான் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. இப்போது இனவாத செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றது.

சட்டம், நீதி எம்மை எதுவும் செய்யாது என்ற நிலைப்பாட்டில் இனவாத குழுக்கள் தொடர்ந்தும் இவ்வாறான சம்பவங்களில் ஈடுபடுவார்கள். ஆகவே குற்றவாளிகளுக்கு எதிராக சட்ட ஒழுங்கு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

இந்த பிரச்சினைக்கு முழுமையான பொறுப்பை அரசாங்கமே ஏற்றுக்கொள்ள வேண்டும்.ஆனால் இந்த அரசாங்கம் எதன் அடிப்படையில் சட்டம் ஒழுங்கை கையாள்கின்றது என்ற கேள்வி எம்மத்தியில் எழுகின்றது. சிலர் தாங்கள் தான் உயர்ந்தவர்கள் என நினைத்து கொண்டு ஏனையவர்களை எம்மைவிட பின்னோக்கி இருந்த நாடுகள் அனைத்தும் எம்மை விடவும் அபிவிருத்தி கண்டு நாட்டின் வளர்ச்சியில் முக்கியத்துவம் செலுத்துகின்றன. நாம் இன்றும் இனவாத செயற்பாடுகளில் மூழ்கி செயற்படுவது தடுக்கப்பட வேண்டும். பிரதமர் இந்த விடயத்தில் உடனடியாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் எதிர்க் கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Previous Post

தேசத்துரோகிகளுக்கு இரையாகாமல் பொறுமையாக செயற்படுங்கள்- பிரதமர்

Next Post

ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றை அமைக்குமாறு ரவூப் ஹக்கீம் கோரிக்கை

Next Post

ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றை அமைக்குமாறு ரவூப் ஹக்கீம் கோரிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

குஜராத் டைட்டன்ஸை சகல துறைகளிலும் விஞ்சிய  றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு  சம்பியன் பட்டத்தை தக்கவைத்தது 

குஜராத் டைட்டன்ஸை சகல துறைகளிலும் விஞ்சிய  றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு  சம்பியன் பட்டத்தை தக்கவைத்தது 

June 1, 2026
சென்னையில் கொடூரம்: களியாட்ட விடுதி தகராறில் கார் மோதி இலங்கைத் தமிழ் அகதிப் பெண் உயிரிழப்பு!

சென்னையில் கொடூரம்: களியாட்ட விடுதி தகராறில் கார் மோதி இலங்கைத் தமிழ் அகதிப் பெண் உயிரிழப்பு!

June 1, 2026
சிறுமி பாலியல் பலாத்காரம்! பிணையில் சென்ற பல்லேகம ஹேமரதன தேரர்

தேரருக்கு பிணை வழங்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

June 1, 2026
பௌத்த பிக்குகள் தொடர்பான விவகாரங்களுக்கு சங்க நீதிமன்றம் அவசியம் – ஞானசார தேரர்

பௌத்த பிக்குகள் தொடர்பான விவகாரங்களுக்கு சங்க நீதிமன்றம் அவசியம் – ஞானசார தேரர்

June 1, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures