Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

முல்­லைத்­தீவு மாவட்ட ஒருங்­கி­ணைப்­புக் குழுக் கூட்­ட தீர்­மா­னம்

February 27, 2018
in News, Politics, World
0

முல்­லைத்­தீவு, முள்­ளி­வாய்க்­கால் கிழக்கு, வட்­டு­வா­கல் பகு­தி­யில் கடற்­ப­டை­யி­னர் ஆக்­கி­ர­மித்து வைத்­துள்ள மக்­க­ளு­டைய காணி­யில் ஒரு துண்­டுக் காணி­யைக் கூட கோத்­த­பாய முகாம் அமைத்­துள்ள கடற்­ப­டைக்கு வழங்க முடி­யாது.

இவ்­வாறு முல்­லைத்­தீவு மாவட்ட ஒருங்­கி­ணைப்­புக் குழுக் கூட்­டத்­தில் தீர்­மா­னம் நிறை­வேற்­றப்­பட்­டது.

முல்­லைத்­தீவு மாவட்ட ஒருங்­கி­ணைப்­புக் குழுக் கூட்­டம் நேற்று நடை­பெற்­றது. அதில் வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர் இந்த விட­யம் தொடர்­பில் கொண்­டு­வந்த தீர்­மா­னம் ஏக­ம­ன­தாக நிறை­வேற்­றப்­பட்­டது.
முள்­ளி­வாய்க்­கால் கிழக்கு, வட்­டு­வா­க­லில் பொது­மக்­க­ளுக்­குச் சொந்­த­மான 617 ஏக்­கர் காணி­யில் கோத்­த­பாய கடற்­படை முகாம் அமைந்­துள்­ளது.

அந்­தக் காணி­க­ளைக் கடற்­ப­டை­யி­ன­ரின் தேவைக்­காக சுவீ­க­ரிக்­கும் முயற்­சி­கள் பல தட­வை­கள் மேற்­கொள்­ளப்­பட்­டன. பொது­மக்­க­ளின் எதிர்ப்­பால் அவை பய­ன­ளிக்­க­வில்லை.கடந்த வியா­ழக்­கி­ழ­மை­யும் காணி அள­வீடு செய்­யப்­ப­டும் என நில அள­வைத் திணைக்­க­ளம் அறி­வித்­தி­ருந்­தது. காணி சுவீ­க­ரிப்­பைக் கைவி­டு­மாறு கோரி பொது­மக்­கள், காணி உரி­மை­யா­ளர்­கள் முகா­முக்கு முன்­பா­கப் போராட்­டத்­தில் ஈடு­பட்­ட­னர்.

ஆனால் வேறு வழி­யூ­டாக நில அள­வை­யா­ளர்­கள் கடற்­படை முகா­முக்­குள் சென்­ற­னர். அவர்­கள் வெளி­யேற வேண்­டும், நில அள­வீட்டை நிறுத்த வேண்­டும் எனக் கோரி வட்­டு­வா­கல் பாலத்தை மறித்து பொது­மக்­கள் போராட்­டத்­தில் ஈடு­பட்­ட­னர்.

நில அளவை கைவி­டப்­ப­டு­கின்­றது என்­றும், முல்­லைத்­தீவு மாவட்ட ஒருங்­கி­ணைப்­புக் குழுக் கூட்­டத்­தில் இந்த விட­யம் தொடர்­பா­கக் கலந்­து­ரை­யா­டப்­ப­டும் என­வும் எழுத்து மூல­மாக தெரி­வித்­தால் மட்­டுமே போராட்­டம் கைவி­டப்­ப­டும் எனப் போராட்­டத்­தில் ஈடு­பட்ட மக்­கள் தெரி­வித்­த­னர்.

இந்த விட­யங்­களை உள்­ள­டக்கி கரைத்­து­றைப்­பற்று பிர­தேச செய­ல­ரின் கையொப்­பத்­து­ட­னான கடி­தத்தை மாவட்ட மேல­திக செய­லர் போராட்­டத்­தில் ஈடு­பட்ட மக்­க­ளி­டம் கைய­ளித்­தார். மக்­கள் போராட்­டத்­தைக் கைவிட்­டி­ருந்­த­னர்.

நேற்று நடை­பெற்ற ஒருங்­கி­ணைப்­புக் குழுக் கூட்­டத்­தில் குறித்த விட­யம் ஆரா­யப்­பட்­டது. அந்­தக் காணி­களை கடற்­ப­டைக்கு வழங்க முடி­யாது எனத் தீர்­மா­னம் நிறை­வேற்­றப்­பட்­டது.

Previous Post

விசம் கூடிய மீனை உட்கொண்டதில் பெண்ணொருவர் பலி !!

Next Post

ஸ்ரீதேவியின் கணவரிடம் விசாரணை

Next Post

ஸ்ரீதேவியின் கணவரிடம் விசாரணை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures