Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Sports

சுப்மன் சதம் : பைனலில் இந்தியா

January 31, 2018
in Sports
0

ஜூனியர் உலக கோப்பை தொடரின் பைனலுக்கு இந்திய அணி ஆறாவது முறையாக முன்னேறியது. அரையிறுதியில் சுப்மன் கில் ‘சூப்பர்’ சதம் அடிக்க, பாகிஸ்தானை, 203 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

நியூசிலாந்தில் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. கிறைஸ்ட்சர்ச்சில் நடந்த இரண்டாவது அரையிறுதியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற இந்திய கேப்டன் பிரித்வி ஷா, ‘பேட்டிங்’ தேர்வு செய்தார்.

சுப்மன் சதம்:

இந்திய அணிக்கு பிரித்வி ஷா, மன்ஜோத் சிறப்பான துவக்கம் தந்தனர். முதல் விக்கெட்டுக்கு 89 ரன் சேர்த்தபோது, பிரித்வி ஷா (41) ஆட்டமிழந்தார். மன்ஜோத் 47 ரன்களில் அவுட்டானார். அர்ஷாத் ‘வேகத்தில்’ ஹார்விக் தேசாய் (2௦), ரியான் (2), அபிஷேக் (5) விரைவில் திரும்பினர். பின், இணைந்த சுப்மன் கில், அன்குல் ராய் ஜோடி அசத்தியது. அன்குல் 33 ரன்களில் ஆட்டமிழந்தார். கம்லேஷ் (1), ஷிவம் மாவி (10) நிலைக்கவில்லை. இருப்பினும், அபாரமாக விளையாடிய சுப்மன் கில், சதம் கடந்தார். இதன் மூலம், இம்முறை சதம் அடித்த முதல் இந்திய வீரரானார். இந்திய அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 272 ரன்கள் எடுத்தது. சுப்மன் கில் (102), இஷான் (1) அவுட்டாகாமல் இருந்தனர்.

இஷான் மிரட்டல்:

பின், களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு இஷான் போரல் தொல்லை தந்தார். இவரது ‘வேகத்தில்’ முகமது ஜாயத் (7), இம்ரான் ஷா (2), ஜார்யப் (1) அடுத்தடுத்து சிக்கினர். அமாத் 4 ரன்களில் திரும்பினார். இதனால், 12 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 28 ரன்கள் எடுத்து தடுமாறியது. இந்த நேரத்தில், ‘சுழல்’ வீரர்கள் எழுச்சி பெற்றனர். ஷிவா சிங் பந்தில் முகமது தாகா (4) நடையைக்கட்டினர். கேப்டன் ஹசன் கான் (1) கைவிட்டார். அதிகபட்சமாக ரோகைல் 18 ரன்கள் எடுத்தார். முடிவில், பாகிஸ்தான் அணி 29.3 ஓவரில் 69 ரன்களுக்கு சுருண்டு தோல்வியடைந்தது. இது, ‘ஜூனியர்’ உலக கோப்பை அரங்கில் பாகிஸ்தான் அணியின் குறைந்தபட்ச ஸ்கோராக அமைந்தது. இந்தியா சார்பில் அதிகபட்சமாக இஷான் 4 விக்கெட் வீழ்த்தினார். ஆட்ட நாயகன் விருதை சுப்மன் கில் வென்றார்.

ஆஸி.,யுடன் பைனல்:

இதன் மூலம், இந்திய அணி பைனலுக்கு முன்னேறியது. வரும் 3ம் தேதி நடக்கவுள்ள பைனலில் ஆஸ்திரேலியாவை எதிர் கொள்கிறது. இரு அணிகளும் இதுவரை தலா 3 முறை கோப்பை வென்றுள்ளன. பைனலில் இந்தியா வென்றால், அதிக முறை (4) பட்டம் வென்று சாதனை படைக்கலாம்.

6

இந்த வெற்றியின் மூலம், இந்திய அணி இத்தொடரில் 6வது முறையாக பைனலுக்கு முன்னேறியது. இதில் முகமது கைப் (2000), விராத் கோஹ்லி (20௦8), உன்முக்த் சந்த் (2012) தலைமையில் இந்திய அணி 3 முறை கோப்பை வென்றது. இரண்டு முறை (2006– புஜாரா, 2016–இஷான் கிஷான்) பைனலில் வீழ்ந்தது.

சிறந்த வெற்றி

இப்போட்டியில், இந்திய அணி 203 ரன் வித்தியாசத்தில் வென்றது. இதன் மூலம், இந்தியா 19 வயதுக்குட்பட்டோருக்கான ஒரு நாள் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான சிறந்த வெற்றியை பதிவு செய்தது.

‘ஹாட்ரிக்’ வெற்றி

நேற்று அசத்திய இந்திய அணி, ‘ஜூனியர்’ உலக கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக ‘ஹாட்ரிக்’ வெற்றி பெற்றது. இதற்கு முன், 2012 (காலிறுதி, டவுன்ஸ்வில்லே), 2014ல் (லீக் சுற்று, துபாய்) தோற்கடித்தது.

சபாஷ் டிராவிட்

கடந்த 2015ல் 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணி பயிற்சியாளராக இந்திய முன்னாள் வீரர் டிராவிட் நியமிக்கப்பட்டார். இவரது சிறப்பான பயிற்சியின் மூலம், 2016ல் வங்கதேசத்தில் நடந்த உலக கோப்பை தொடரில் இந்திய அணி பைனல் வரை முன்னேறியது. இவரின் திறமையான பயிற்சி கைகொடுக்க, இந்திய அணி இத்தொடரில் 2வது முறையாக பைனலுக்கு முன்னேறி உள்ளது.

பரிசு நிச்சயம்

இந்திய கிரிக்கெட் போர்டு தற்காலிக தலைவர் சி.கே.கண்ணா கூறுகையில்,‘‘ 19 வயதுக்குட்பட்டோருக்கான உலக கோப்பை தொடரில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா பைனலுக்கு முன்னேறி உள்ளது. இந்திய வீரர்களுக்கும், பயிற்சியாளர் டிராவிட்டிற்கும் வாழ்த்துகள். இந்திய வீரர்களுக்கு விரைவில் பாராட்டுவிழா நடத்தி, பரிசுத்தொகை அறிவிக்கப்படும்,’’ என்றார்.

சச்சின் பாராட்டு

இந்திய அணி பைனலுக்கு முன்னேறியதற்கு முன்னாள் நட்சத்திரங்கள் ‘டுவிட்டரில்’ பாராட்டு தெரிவித்துள்ளனர்.

சச்சின்: இந்திய அணி பேட்டிங், பவுலிங், பீல்டிங் என மூன்றிலும் சிறப்பாக செயல்பட்டது. பைனலில் கோப்பை வெல்ல வாழ்த்துகிறேன்.

லட்சுமண்: பாகிஸ்தானுக்கு எதிரான அரையிறுதியில் இந்திய அணியின் ஆட்டம் வியப்பாக இருந்தது. பாகிஸ்தான் அணிக்கு ஒரு ‘இன்ச்’ அளவுக்கு கூட விட்டுத்தரவில்லை.

Previous Post

இலங்கை – பங்களாதேஸ் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் நிறைவு

Next Post

மெல்போர்னில் உலக கோப்பை பைனல்

Next Post
மெல்போர்னில் உலக கோப்பை பைனல்

மெல்போர்னில் உலக கோப்பை பைனல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

தமிழ்தேசியத்தின் எழுச்சியாக Tamils Day… பாடத்தை உணர்த்தும் காலத்தின் எச்சரிக்கை… கிருபா பிள்ளை

தமிழ்தேசியத்தின் எழுச்சியாக Tamils Day… பாடத்தை உணர்த்தும் காலத்தின் எச்சரிக்கை… கிருபா பிள்ளை

July 22, 2026
சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

மது அருந்தி வாகனம் செலுத்திய குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட டேவிட் வோர்னர்

July 22, 2026
மு.க.ஸ்டாலினை சந்தித்தார் எம்.ஏ. சுமந்திரன்   

மு.க.ஸ்டாலினை சந்தித்தார் எம்.ஏ. சுமந்திரன்   

July 22, 2026
நீங்கள் தந்தது காகிதம் அல்ல | எனது உள்ளத்தால் ஏற்கிறேன் என கூறிய ஐரோப்பிய துதுவர் கார்மென் மேரேனா

நீங்கள் தந்தது காகிதம் அல்ல | எனது உள்ளத்தால் ஏற்கிறேன் என கூறிய ஐரோப்பிய துதுவர் கார்மென் மேரேனா

July 22, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures