Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Sports

தொடரை இழந்தது இந்தியா: செஞ்சூரியன் டெஸ்டில் தோல்வி

January 18, 2018
in Sports
0
தொடரை இழந்தது இந்தியா: செஞ்சூரியன் டெஸ்டில் தோல்வி

செஞ்சூரியன் டெஸ்டிலும் இந்திய அணியின் ‘பேட்டிங்’ மடமடவென சரிந்தது. இரண்டாவது இன்னிங்சில் 151 ரன்களுக்கு சுருண்டு, 135 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. தொடரை 0–2 என இழந்தது. தென் ஆப்ரிக்க தரப்பில் ‘வேகத்தில்’ மிரட்டிய லுங்கி நிகிடி, 6 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் தோற்ற இந்தியா, 0–1 என, தொடரில் பின் தங்கி இருந்தது. இரு அணிகள் மோதிய இரண்டாவது டெஸ்ட், செஞ்சூரியனில் நடந்தது.

இதில் வென்றால் மட்டுமே தொடரை வெல்ல முடியும் என்ற நிலையில், இந்தியா களமிறங்கியது. முதல் இன்னிங்சில் தென் ஆப்ரிக்கா 335, இந்தியா 307 ரன்கள் எடுத்தன. இரண்டாவது இன்னிங்சில் தென் ஆப்ரிக்க அணி 258 ரன்கள் எடுத்தது. நான்காவது நாள் முடிவில் இந்திய அணி, இரண்டாவது இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 35 ரன்கள் எடுத்திருந்தது. புஜாரா (11), பார்த்திவ் (5) அவுட்டாகாமல் இருந்தனர்.

புஜாரா ஏமாற்றம்: ஐந்தாவது மற்றும் கடைசி நாள் ஆட்டத்தில், பிலாண்டர் பந்தில் பவுண்டரி அடித்த புஜாரா, உறுதியான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியை மீட்பார் என நம்பப்பட்டது. ஆனால், 19 ரன் எடுத்த இவர், தேவையில்லாமல் ரன் அவுட்டானார். சிறிது நேரத்தில் பார்த்திவ் படேலும் (19) அவுட்டானார்.

பாண்ட்யா சொதப்பல்: பின் ரோகித் சர்மாவுடன் இணைந்தார் பாண்ட்யா. நிகிடி வீசிய பவுன்சரை, பாய்ந்து அடித்த இவரை, ஒற்றை கையினால் ‘கேட்ச்’ செய்து பெவிலியனுக்கு அனுப்பினார் விக்கெட் கீப்பர் குயின்டன். சற்று தாக்குப் பிடிப்பார் என்று நம்பப்பட்ட நம்ம ஊரு அஷ்வின் (3), அடுத்த சில நிமிடத்தில் கிளம்ப, இந்திய அணி 87 ரன்னுக்கு 7 விக்கெட்டுகளை இழந்தது.

ரோகித் போராட்டம்: பின் வரிசையில் வந்த ‘டெயிலெண்டர்’ முகமது ஷமி, ரோகித்துக்கு கைகொடுத்தனர். மகராஜ் ஓவரில் தலா ஒரு சிக்சர், பவுண்டரி அடித்தார் ரோகித். மறுபுறம் மகராஜ், நிகிடி பந்துகளை பவுண்டரிக்கு விரட்டினார் ஷமி. அடுத்து ரபாடா ஓவரில் இரு பவுண்டரி அடித்த ரோகித் சர்மா (47), இவரது பவுன்சரிலேயே அவுட்டாக, செஞ்சூரியனில் இந்தியாவின் தோல்வி காயத்திற்கு(இஞ்சூரி) மருந்து போட ஆளில்லாமல் போனது.

தொடர்ந்து மிரட்டிய நிகிடி, இம்முறை ஷமி(28), பும்ராவை (2) வெளியேற்றினார். முடிவில், இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 151 ரன்களுக்கு ஆல்–அவுட்டாகி, தோல்வியடைந்தது. தென் ஆப்ரிக்கா சார்பில் அதிகபட்சமாக நிகிடி 6 விக்கெட் வீழ்த்தினார்.

இரு அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் வரும் 24ல் ஜோகன்ஸ்பர்க்கில் துவங்குகிறது.

Previous Post

அமெரிக்காவின் அடுத்த பேரிடி…!

Next Post

வருகிறார்கள் வாரிசுகள்..

Next Post
வருகிறார்கள் வாரிசுகள்..

வருகிறார்கள் வாரிசுகள்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

விஜயின் கருத்தால் யாழ் மக்களுக்காக கொதித்தெழுந்த தேரர்

தமிழக முதல்வரிடம் யாழ் கடற்றொழிலாளர் அமைப்பு விடுத்துள்ள கோரிக்கை!

July 22, 2026
ஓய்வை அறிவித்தார் இலங்கையின் அதிவேக ஓட்ட வீரர் யுபுன் அபேகோன்!

ஓய்வை அறிவித்தார் இலங்கையின் அதிவேக ஓட்ட வீரர் யுபுன் அபேகோன்!

July 22, 2026
மித்தெனிய ஐஸ் போதைப் பொருள் விவகாரத்தில் நாமல் – ஜோன்ஸ்டனுக்கு தொடர்பு

நாமல் ராஜபக்‌ஷ இந்தியா விஜயம் 

July 21, 2026
போதைப்பொருள் உட்கொண்டு வாகனங்களை செலுத்திய 790 சாரதிகள் கைது

தேசிய போதைப்பொருள் ஒழிப்புத் திட்டம் ; 795 சந்தேகநபர்கள் கைது!

July 21, 2026

Recent News

விஜயின் கருத்தால் யாழ் மக்களுக்காக கொதித்தெழுந்த தேரர்

தமிழக முதல்வரிடம் யாழ் கடற்றொழிலாளர் அமைப்பு விடுத்துள்ள கோரிக்கை!

July 22, 2026
ஓய்வை அறிவித்தார் இலங்கையின் அதிவேக ஓட்ட வீரர் யுபுன் அபேகோன்!

ஓய்வை அறிவித்தார் இலங்கையின் அதிவேக ஓட்ட வீரர் யுபுன் அபேகோன்!

July 22, 2026
மித்தெனிய ஐஸ் போதைப் பொருள் விவகாரத்தில் நாமல் – ஜோன்ஸ்டனுக்கு தொடர்பு

நாமல் ராஜபக்‌ஷ இந்தியா விஜயம் 

July 21, 2026
போதைப்பொருள் உட்கொண்டு வாகனங்களை செலுத்திய 790 சாரதிகள் கைது

தேசிய போதைப்பொருள் ஒழிப்புத் திட்டம் ; 795 சந்தேகநபர்கள் கைது!

July 21, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures