Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

புதிதாக நிர்மாணிக்கப்படும் தாதியர் பீடத்திற்கு ஜனாதிபதி அடிக்கல்

December 21, 2017
in News, Politics
0
புதிதாக நிர்மாணிக்கப்படும் தாதியர் பீடத்திற்கு ஜனாதிபதி அடிக்கல்

அறிவு, ஆற்றல், திறமை நிறைந்த பட்டதாரி தாதியர்களை உருவாக்கும் நோக்குடன் ஸ்ரீ ஜயவர்தனபுர தாதியர் கல்லூரி வளாகத்தில் நிர்மாணிக்கப்படும் கொழும்பு பல்கலைக்கழகத்துடன் இணைந்த தாதியர் பீடத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் நேற்று (20) பிற்பகல் இடம்பெற்றது.

இலங்கை அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்படும் இந்த தாதியர் பீடத்திற்கான மொத்தச் செலவு 14.5 பில்லியன் ரூபாய்களாகும். 17 மாடிகளைக் கொண்ட இந்த தாதியர் பீடத்தில் 2,000 தாதியர்கள் ஒரே தடவையில் பயிற்சிகளைப் பெறுவதற்கான வசதிகள் காணப்படுகின்றன.

குறித்த தாதியர்களுக்கான தங்குமிட விடுதி கொழும்பு கிழக்கு ஆதார மருத்துவமனை வளாகத்தில் நிர்மாணிக்கப்படுவதுடன், விளையாட்டு வசதிகள், நீச்சல் தடாகம், உடற்பயிற்சி நிலையம் உள்ளிட்ட சகல வசதிகளையும் கொண்டதாக இது அமைக்கப்படுகிறது.

தாதியர் பீடமொன்று ஆரம்பிக்கப்படுவதற்கான வேண்டுகோள் நீண்டகாலமாக நிறைவேற்றப்படாமல் காணப்பட்டதுடன், ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் வழிகாட்டலில் 2016 ஆம் ஆண்டு வரவுசெலவு திட்டத்தினூடாக அதற்கான நிதி ஒதுக்கப்பட்டது.

தேசிய மட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பட்டதாரி தாதியர்களை உருவாக்குதல், தாதியர் சேவையில் வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கான பயிற்சிகளையும் அறிவையும் பெற்றுக்கொடுத்தல், தாதியர் சேவையின் நிபுணத்துவத்தினை மேம்படுத்துதல் என்பன இதனூடாக எதிர்பார்க்கப்படுகின்றது.

புதிய தாதியர் பீடத்தின் நிர்மாணப்பணிகளை ஆரம்பிப்பதற்கான நினைவுப் பலகையை ஜனாதிபதி அவர்கள் திரைநீக்கம் செய்து வைத்தார்.

தாதியர் சேவையின் உன்னதத்திற்காக ஜனாதிபதி அவர்களின் பங்களிப்பினை பாராட்டும் முகமாக விசேட பரிசிலும் இதன்போது ஜனாதிபதி அவர்களுக்கு வழங்கப்பட்டது.

அமைச்சர்களான ராஜித்த சேனாரத்ன, லக்ஷ்மன் கிரியெல்ல, பிரதி அமைச்சர் பைசர் காசிம், பாராளுமன்ற உறுப்பினர் ஆஷு மாரசிங்க, சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக்க சுகததாச, கொழும்பு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் லக்ஷ்மன் திசாநாயக்க, அரச தாதியர் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னப்ரிய உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Previous Post

ஜெருசலேம் விவகாரத்தில் டிரம்ப் முடிவை திரும்பப்பெற ஐ.நா. சபை இன்று வாக்கெடுப்பு

Next Post

உங்களைப் பற்றி கூகுள் தெரிந்து வைத்திருப்பதை அழிப்பது எப்படி?

Next Post

உங்களைப் பற்றி கூகுள் தெரிந்து வைத்திருப்பதை அழிப்பது எப்படி?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

குஜராத் டைட்டன்ஸை சகல துறைகளிலும் விஞ்சிய  றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு  சம்பியன் பட்டத்தை தக்கவைத்தது 

குஜராத் டைட்டன்ஸை சகல துறைகளிலும் விஞ்சிய  றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு  சம்பியன் பட்டத்தை தக்கவைத்தது 

June 1, 2026
சென்னையில் கொடூரம்: களியாட்ட விடுதி தகராறில் கார் மோதி இலங்கைத் தமிழ் அகதிப் பெண் உயிரிழப்பு!

சென்னையில் கொடூரம்: களியாட்ட விடுதி தகராறில் கார் மோதி இலங்கைத் தமிழ் அகதிப் பெண் உயிரிழப்பு!

June 1, 2026
சிறுமி பாலியல் பலாத்காரம்! பிணையில் சென்ற பல்லேகம ஹேமரதன தேரர்

தேரருக்கு பிணை வழங்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

June 1, 2026
பௌத்த பிக்குகள் தொடர்பான விவகாரங்களுக்கு சங்க நீதிமன்றம் அவசியம் – ஞானசார தேரர்

பௌத்த பிக்குகள் தொடர்பான விவகாரங்களுக்கு சங்க நீதிமன்றம் அவசியம் – ஞானசார தேரர்

June 1, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures