வடக்கு மாகாணத்தில் மேலும் பல சுயேச்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளன. கிளிநொச்சி மாவட்டத்தில் மாத்திரம் இன்று மூன்று சுயேச்சைக் குழுக்கள் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளன.
கிளிநொச்சி மாவட்டத்தில் மூன்று உள்ளூராட்சி சபைகளுக்கும் மேலும் மூன்று சுயேச்சைக் குழுக்கள் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளன.
முல்லைத்தீவு மாவட்டத்தில் இன்று ஐக்கிய தேசியக் கட்சி நான்கு சபைகளுக்கும் கட்டுப் பணம் செலுத்தியுள்ளது. மேலும், சுயேச்சைக் குழு ஒன்றும், அரசியல் கட்சி ஒன்றும் கட்டுப் பணம் செலுத்தியுள்ளது.
வவுனியா மாவட்டத்தில், வவுனியா தெற்கு சிங்கள பிரதேச சபைக்குப் போட்டியிடுவதற்கு இன்றும் மூன்று சுயேச்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளன. ஐக்கிய தேசியக் கட்சியும் சகல சபைகளிலும் போட்டியிட கட்டுப்பணம் செலுத்தியுள்ளது.
மன்னார் மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் அனைத்துச் சபைகளுக்கும் போட்டியிட கட்டுப் பணம் செலுத்தியுள்ளன.