248 உள்ளூராட்சி சபைகளுக்குமான வேட்புமனுக்கள் எதிர்வரும் 18ஆம் திகதி தொடக்கம் 21ஆம் திகதிவரை ஏற்றுக்கொள்ளப்படும் எனத் தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அதேவேளை, வேட்புமனுத் தாக்கலின்போதும், அதன் பின்னரும் தேர்தல் சட்டத்தை மீறும் வகையில் செயற்படுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.