பரீட்சைக்குத் தோற்றவுள்ள பாடசாலை மாணவர்களுக்கும் பொது மக்களுக்கும் ஏற்படும் அசௌகரியங்களைக் கருத்திற்கொண்டு சேவைக்குத் திரும்புமாறு வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ரயில் சாரதிகள் உள்ளிட்ட அனைத்து ஊழியர்களிடமும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உயர் கல்வி தடைதாண்டல் பரீட்சைக்குத் தோற்றும் பிள்ளைகளுக்கு ஏற்படும் உளரீதியான பாதிப்புகள் மிகுந்த கவனத்துடன் நோக்கப்படவேண்டும் என்பதால் தமது மனிதாபிமான பணியை பொறுப்புடன் நிறைவேற்றுமாறும் ஜனாதிபதி அனைவரிடமும் கேட்டுக்கொண்டுள்ளார்.
வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் தீர்க்கப்படாத பிரச்சினைகள் இருப்பின் அவற்றைத் தீர்ப்பது குறித்துக் கலந்துரையாடுவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித் தர முடியும் என்றும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மேலும் தெரிவித்துள்ளார்.

