அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தினமும் 4 முதல் 8 மணிநேரம் டிவி நிகழ்ச்சிகளிலேயே மூழ்கி கிடப்பதாக நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை, அமெரிக்க வெள்ளை மாளிகையில் பணிபுரியும் அதிபர் டிரம்பிற்கு நெருக்கமானவர்களிடமிருந்து தகவல்களை சேகரித்து, அந்த அறிக்கையை, செய்தியாக வெளியிட்டுள்ளது.
அவர்கள் தெரிவித்துள்ளதாவது, அதிபர் டிரம்ப் காலை 5.30 மணிக்கு எழுந்தவுடன், அன்றைய அன்றாட நிகழ்வுகளை தெரிந்துகொள்வதற்காக, சிஎன்என் சேனலை பார்ப்பார். பின் பாக்ஸ் அண்ட் பிரண்ட்ஸ் சேனலையும், அவ்வப்போது எம்எஸ்என்பிசி சேனலில் ஒளிபரப்பாகும் மார்னிங் ஜோ நிகழ்ச்சியையும் பார்ப்பார். இவ்வாறாக, அதிபர் டிரம்ப் நாளொன்றுக்கு 4 மணிநேரம் முதல் 8 மணிநேரம் வரை டிவியிலேயே மூழ்கி கிடப்பார் என்று அந்த தெரிவித்துள்ளனர்.
வெள்ளை மாளிகையின் டைனிங் ஹால் பகுதியில் உள்ள 60 இஞ்ச் டிவியின் மீதே, டிரம்ப் தனது முழுகவனத்தையும் வைத்திருப்பார். அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வரும் நிலையிலும், பெரும்பாலான நேரத்தில், டிரம்பின் கவனம் டிவி மீதே இருக்கும் என்று அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
நான் அதிகமாக டிவி பார்ப்பதில்லை என்று டிரம்ப் கடந்த மாதம் தெரிவித்திருந்த நிலையில், வெள்ளை மாளிகை பணியாளர்கள் தெரிவித்துள்ளதாக நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தி பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
@subtitle@ டிரம்ப் மறுப்பு :
இந்நிலையில், நான் அதிகநேரம் டிவி பார்ப்பதாக வெளியாகியுள்ள செய்திக்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் மறுப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, அதிபர் டிரம்ப் டுவிட்டரில் தெரிவித்துள்ளதாவது, நான், 4 முதல் 8 மணிநேரம் டிவி பார்ப்பதாக வெளியாகியுள்ள செய்தியில் உண்மையில்லை. என்னை பொறுத்தவரையில், CNN or MSNBC இவ்விரண்டையும் போலி செய்தி சேனலாகவே கருதுகிறேன். டான் லீமன் நிகழ்ச்சிகளை நான் இதுவரை பார்த்ததில்லை. அவரது தவறான செய்தி சேகரிப்பு நடவடிக்கைகளால், தொலைக்காட்சியின் முட்டாள் மனிதனாகவே, டான் லீமனை தான் பார்ப்பதாக டிரம்ப் அதில் குறிப்பிட்டுள்ளார்.