நேபாளில் மீண்டும் கூட்டணி ஆட்சி அமைகிறது. நேபாளில் பாராளுமன்ற மற்றும் மாகாண கவுன்சில் ஆகியவற்றிற்கு நவ.26 மற்றும் டிசம்பர் 7-ம் தேதி என இரண்டு கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்தது. இதில் முன்னாள் பிரதமர் கே.பி. ஒளி தலைமையிலான சி.பி.என். யுஎம். எல்.கட்சியும், முன்னாள் பிரதமர் பிரசன்டா தலைமையிலான சி.பி.என். மாவோயிஸ்ட் கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன.
மொத்தமுள்ள 275 உறுப்பினர்களில் முதல்கட்டமாக 165 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் நேற்று ஒட்டு எண்ணிக்கை நடந்தது. சி.பி.என். யு.எம்.எல், கட்சி 74 இடங்களையும், சி.பி.என். மாவோயிஸ் கட்சி 32 இடங்களையும் பிடித்து 106 இடங்களை பெற்று ஜொரிட்டி பெற்றது. கே.பி. ஒளி பிரதமராக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.