Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தமிழரசுக் கட்சியின் அணுகுமுறையை நிறுத்துவதற்கு பலமான கூட்டணி அவசியம்: சுரேஷ்

December 5, 2017
in News, Politics
0
தமிழரசுக் கட்சியின் அணுகுமுறையை நிறுத்துவதற்கு பலமான கூட்டணி அவசியம்: சுரேஷ்

அரசியலமைப்பு தொடர்பில் தமிழரசுக் கட்சி மேற்கொண்டு வருகின்ற தவறான வழிமுறைகளை தடுத்து நிறுத்துவதற்கும் அவற்றை தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை வெளிப்படுத்துவதற்கும் உள்ளூராட்சிசபைத் தேர்தலில் பலமான கூட்டணி அவசியம் என ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சியின் தலைவர் சுரேஷ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நேற்று (சனிக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“உள்ளூராட்சிசபைத் தேர்தல் என்பது தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாக இல்லை. அது கிராமிய மட்டத்தில் அபிவிருத்திகளை இலக்காகக் கொண்ட தேர்தலாகும் உள்ளூராட்சிசபைத் தேர்தல் வெற்றியின் ஊடாக புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கையினை மக்கள் ஒத்துக் கொண்டிருக்கிறார்கள் எனக் காட்டுவதற்கு தமிழரசுக் கட்சி ஆர்வம் காட்டுகிறது. ஆனால் வெளியாகியிருக்கும் இடைக்கால அறிக்கை என்பது மிக பிழையான ஒன்றாகும்.

தமிழ் மக்களுக்கு பிழையான நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்துவதற்கு பொதுவான ஒரு எதிரணி தேவை என்பது உணரப்பட்டிருக்கின்றது. அந்தவகையில் தேசிய கொள்கைகளை ஒத்துக் கொண்டு, கிராமிய அபிவிருத்திகளையும் கருத்தில் கொண்டு தமிழ்தேசிய மக்கள் முன்னணியுடன் தொடர்ச்சியாகப் பேச்சு நடத்தப்பட்டு பலமான பொது எதிரணி ஒன்றை உருவாக்க நினைத்தோம்.

அதில் சமூகத்தில் உள்ள பல அமைப்புக்களையும் இணைத்து செயற்பட தீர்மானித்திருந்தோம். அந்தவகையில் பலராலும் ஆதரிக்கப்பட்ட, தந்தை செல்வாவாலும் ஆதரிக்கப்பட்ட தமிழர் விடுதலை கூட்டணியின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட தீர்மா னிக்கப்பட்டது.

ஆனால் இது ஒரு தற்காலிகமான ஏற்பாடு மட்டுமே. தேர்தலில் வெற்றி பெற்றதன் பின்னர் சகல தரப்பினரின் கருத்துக்களையும் பெற்று தீர்மானிக்கலாம் எனவும் தீர்மானித்திருந்தோம். ஆனால் தமிழ்தேசிய மக்கள் முன்னணி அதனை நிராகரித்துள்ளதுடன், அதற்காக பல்வேறு காரணங்களையும் கூறியிருக்கின்றது.

எனவே எமக்கும் தமிழ்தேசிய மக்கள் முன்னணிக்கும் கொள்கை ரீதியான பிரச்சினைகள் எவையுமில்லை. அதேபோல் நாம் இணங்கி செயற்படுவதற்கான காலமும் அதிகம் உள்ளது. எனவே என்ன வகையில் தொடர்ந்து இணைந்து செயற்படலாம் என தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகளை நாங்கள் நடாத்துவோம்” என சுரேஷ் பிறேமச்சந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.

Previous Post

ஜெயலலிதாவின் இறுதி நாட்கள்!

Next Post

ஆர்.கே. நகரில் பால பாடம் கற்றுக்கொள்வாரா விஷால்

Next Post

ஆர்.கே. நகரில் பால பாடம் கற்றுக்கொள்வாரா விஷால்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

விஜயின் கருத்தால் யாழ் மக்களுக்காக கொதித்தெழுந்த தேரர்

தமிழக முதல்வரிடம் யாழ் கடற்றொழிலாளர் அமைப்பு விடுத்துள்ள கோரிக்கை!

July 22, 2026
ஓய்வை அறிவித்தார் இலங்கையின் அதிவேக ஓட்ட வீரர் யுபுன் அபேகோன்!

ஓய்வை அறிவித்தார் இலங்கையின் அதிவேக ஓட்ட வீரர் யுபுன் அபேகோன்!

July 22, 2026
மித்தெனிய ஐஸ் போதைப் பொருள் விவகாரத்தில் நாமல் – ஜோன்ஸ்டனுக்கு தொடர்பு

நாமல் ராஜபக்‌ஷ இந்தியா விஜயம் 

July 21, 2026
போதைப்பொருள் உட்கொண்டு வாகனங்களை செலுத்திய 790 சாரதிகள் கைது

தேசிய போதைப்பொருள் ஒழிப்புத் திட்டம் ; 795 சந்தேகநபர்கள் கைது!

July 21, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures