இந்த வருடத்தில் மாத்திரம் 350 க்கும் அதிகமான கடத்தல்காரர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வரலாறு காணத அளவு எண்ணிக்கையாக இது பதிவாகியுள்ளது.
பிரெஞ்சு- இத்தாலி எல்லையில் கடத்தல் தொழில் மற்றும் ஆட்கடத்தல்கள் தொழிலில் ஈடுபட்டுவருபவர்கள் கடந்த ஒரே வருடத்தில் 350 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தவிர 50,000 அகதிகள் எல்லைகளில் வைத்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். இத்தகவலை இன்று திங்கட்கிழமை Alpes-Maritimes மாவட்ட அதிகாரி Georges-Francois Leclerc ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். “350 என்பது மிகப்பெரிய எண்ணிக்கை. ஒரு நாளைக்கு குறைந்தது ஒருவர் என்ற கணக்கில் கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கைதுசெய்யப்படும் கடத்தல்காரர்களில் துனிசிய நாட்டைச் சேர்ந்தவர்கள் தான் அதிகம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை கைது செய்யப்பட்டு திருப்பி அனுப்பப்படும் அதிகளின் எண்ணிக்கையும் கடந்த வருடங்களை விடவும் இவ்வரும் அதிகம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.